தர்மபுரி, ஜூன் 7:
தர்மபுரி நகரில் ரசாயன கல்லில் மாம்பழம் பழுக்க வைத்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மாம்பழம் உற்பத்தியில் தர்மபுரி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. தர்மபுரி, காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பலவகை மாங்காய்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன்படி, 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, செந்தூரா, மல்கோவா, பீத்தர், ரோஸ்குண்டு உள்ளிட்ட ரக மாம்பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ மாம்பழம் ரூ.30 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சில வியாபாரிகள் முதிர்ச்சி அடையாத மாங்காய்களை பறித்து, கார்பைட் என்ற ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர்.
ரசாயன கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை, பொதுமக்கள் சாப்பிடும்போது வயிற்றுவலி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். தர்மபுரியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment