Jun 8, 2015
மேகி நூடுல்ஸ் சிக் க லைத் தொடர்ந்து மற்ற ‘பாஸ்ட் புட் ’ களின் தரத்தை சோதிக்க மத் திய அரசு முடிவு - கோவா வி லும் நூடுல் சுக்கு தடை - மருந்து கடை களுக்கு கிடுக் கிப் படி
பானா ஜி / பு து டெல்லி, ஜூன் 8:
மேகி நூடுல் சின் விற் ப னைக்கு நாடு முழு வ தும் விதிக் கப் பட்ட தடை யைத் தொடர்ந்து, மற்ற நிறு வ னங் களின் நூடுல்ஸ், பாஸ்ட் புட் களின் தரத் தை யும் ஆய்வு செய்ய மத் திய அரசு முடிவு செய் துள் ளது.
இந் நி லை யில், 11-வது மாநி ல மாக கோவா வும், மேகி நூடுல்ஸ் விற் ப னைக்கு நேற்று தடை வி தித் தது. மேலும், மருந்து கடை களில் குழந் தை களுக் கான உண வுப் பொருட் களை விற் பனை செய் ய வும் தடை விதிக்க மத் திய அரசு ஆலோ சித்து வரு கி றது.
நெஸ்லே இந் தியா நிறு வ னம் தயா ரிக் கும் மேகி நூடுல் சில் மனித உட லுக்கு தீங்கு விளை விக் கும் காரி யம் மற் றும் மோனோ சோடி யம் குளோ மேட் எனும் வேதிப் பொ ருள் கள் நிர் ண யிக் கப் பட்ட அள வைக் காட்டி லும் கலந் தி ருப் ப தாக பல மாநி லங் களில் நடத் தப் பட்ட ஆய் வில் தெரி ய வந் தது. இதை ய டுத்து, டெல்லி, மஹா ராஷ் டிரா, தமி ழ கம் உள் ளிட்ட 10 மாநி லங் களில் மேகி நூடுல்ஸ் விற் ப னைக்கு தடை விதிக் கப் பட்டது. இந் நி லை யில், 11 மாநி ல மாக கோவா வும் நேற்று மேகி நூடூல்ஸ் விற் ப னைக்கு தடை வி தித் தது.
இது குறித்து கோவா முதல் வர் லட் சு மி காந்த் பர் சே கர் கூறு கை யில், மேகி நூ டுல்ஸ் பாக் கெட்டு களை ஆய்வு செய் தோம். அதில் எந் த வி த மான தீங் கு வி ளை விக் கும் வேதிப் பொ ருள் கள் அதி க மாக கலந் தி ருப் பது நிரூ பிக் கப் ப ட வில்லை. இருந் த போ தி லும், நாடு முழு வ தும் பாது காப்பு கருதி இந்த பொரு ளுக்கு மத் திய அரசு தடை விதித் த துள் ளது. அதைக் கருத் தில் கொண்டு, கோவா மாநி லத் தி லும் மேகி நூ டுல்ஸ் விற் ப னைக்கு தடை விதிக்க முடிவு செய் துள் ளோம் என் றார்.
இதற் கி டையே மேகி நூடுல்ஸ் தவிர்த்து மற்ற நிறு வ னங் களின் பாஸ்ட் புட் க ளை யும் தீவி ர மாக ஆய்வு செய்ய மத் திய அரசு ஆலோ சித்து வரு கி றது. இது குறித்து, மத் திய உண வுப் பா து காப்பு மற் றும் தரக் கட்டுப் பாடு தலைமை நிர் வாக அதி காரி யுத் விர் சிங் மாலிக் கூறு கை யில், மேகி நூடுல் சைத் தொடர்ந்து மற்ற நிறு வ னங் களின் நூடுல்ஸ் கள், பாஸ்ட் புட் க ளை யும் ஆய்வு செய் வோம். ஏன் ஒரு நிறு வ னத் தி டம் கடு மை யாக நடந் து கொள்ள வேண் டும். மற்ற நிறு வ னங் களின் நூடுல்ஸ் கள், பாஸ்ட் புட் க ளை யும ஆய் வுக்கு அனுப்ப உத் த ர விட்டுள் ளோம். பாஸ்டா, மக் ரூனி பொருட் க ளை யும் ஆய்வு செய் ய வுள் ளோம். என் றார்.
மருந்து கடை களில்...
இது குறித்து ரசா ய னம் மற் றும் உரத் துறை இணை ய மைச் சர் ஹன்ஸ் ராஜ் கங் கா ராம் கூறு கை யில், மருந் துக் க டை களில் மருந் து கள், மற் றும் சிரப் பு கள் விற் பனை செய் ய மட்டுமே அனு மதி. குழந் தை களுக் கான உண வுப் பொ ருட் கள் மருந் துக் க டை களில் விற் பனை செய் யப் ப டு வ தால் அது உடல் ந லத் துக்கு நல் லது என நினைத்து மக் கள் வாங் கு கின் ற னர். உண் மை யில் மேகி விவ கா ரம் போல் நேர்ந் தால், குழந் தை களின் உடல் நலன் என்ன ஆவது. ஆகவே மருந்து கடை களில் குழந் தை களுக் கான உண வுப் பொ ருட் கள் விற் பனை செய் யக் கூ டாது. இதற்கு முறை யாக தடை வி திக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
நாக ரீக அம் மாக் க ளால்...
மேகி நூ டுல் சின் தரத் தில் ஏற் பட்ட பாதிப் பால் பல மாநி லங் களில் விற் ப னைக்கு தடை விதிக் கப் பட்டு வரு கின் றன. ஆனால், பார திய ஜனதா எம்.எல்.ஏ. ஒரு வரோ, நாக ரீக அம் மாக் க ளால் மேகி நூடுல்ஸ் விற் பனை கூடி விட்டது என்று குற் றம் சுமத் தி யுள் ளார்.
மத் தி யப் பி ர தே சம், இந் தூ ரைச் சேர்ந்த பார திய ஜனதா எம்.எல்.ஏ. உஷா தாக் கூர் கூறு கை யில், இப் போ துள்ள அம் மாக் கள் ஏன் இவ் வ ளவு சோம் பே றி க ளாக இருக் கி றார் கள் என எனக்கு தெரி ய வில்லை. எங் களு டைய காலத் தில் அம் மாக் கள் வீட்டில் தயா ரிக் கப் பட்ட பரோட்டா, அல்வா, போன்ற பொருட் களை குழந் தை கள் சாப் பி டக் கொடுத் த னர். ஆனால் இப் போ துள்ள நாக ரீக அம் மாக் களோ குழந் தை களுக்கு சாப் பாடு கொடுக் கி றேன் என 2 நிமி டத் தில் தயா ரா கும் நூடுல்சை கொடுக் கி றார் கள். இவர் க ளால் தான் நூடுல்ஸ் விற் பனை அதி க ரிக் கி றது என் றார்.
ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுப்பொருட்களும், ரசாயன பொருட்களும்
ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில்அதிக அளவு வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் "மேகி நூடுல்ஸ்' ன் விற்பனை நாட்டின் பல் வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நிலையில் மேலும் பல பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் விற்பனைக்கும் தடை வரும் நிலை உருவகி உள்ளது.
"ருசியானது, ஆரோக்கியமானது' என்று மேகி தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாலும், பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்பட்ட ரெடிமேட் நூடுல்ஸ் உணவு வகைகள் என்றுமே உடல் நலத்திற்கு நல்லதல்ல.கடந்த வாரம் "மேகி நூடுல்ஸ்' நாடு முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில் அளவுக்கு அதிகமான காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளுக்கோனேட் போன்ற வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவை தலைவலி, இதய படபடப்பு, நெஞ்சு வலி, குமட்டல், நரம்பு மண்டல பாதிப்பு, பசியின்மை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால். நாடு முழுவதும் உள்ள கடைகளில் மேகி நூடுல்ஸ் விற்பனை தடை செய்யப்பட்டது.
ஆனால், காரீயம் மற்றும் எம்.எஸ்.ஜி மட்டும் மேகியில் பிரச்சனையாக இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது. 2012ல் டில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையம் தந்துள்ள தகவலின் படி "மேகி நூடுல்ஸ்' போன்ற உணவு வகைகளில் அதிக அளவு உப்பும், குறைந்த அளவு நார்ச்சத்தும், கார்போஹைரேட்டும் இருப்பதால் உடல் பருமன் ஆவதோடு நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும் என்று சொல்கிறது.
மேகி நூடுல்ஸ் மட்டுமில்லாமல் பல வகையான உணவுப் பொருட்களின் தரமும் ஆராயப்பட வேண்டியவையாக இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் லேபல்களை ஆராய்ந்து அவற்றில் என்ன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்பதை கவனிப்பது இல்லை. மொறு மொறு பிஸ்கட்டுகளையும் சிப்ஸ்களையும் வாங்கும் மக்கள், அதற்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து மிகுந்த வேதிப் பொருட்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேகி போன்று மற்ற "பாஸ்ட் புட்' வகைகளில் சோடியம் அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடியது. "பாஸ்ட் புட்' தயாரிப்புகள் பல வேதி செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தானியங்கள் பாலிஷ் செய்யப்படுவதால், அவை இயற்கை தன்மையை இழந்து ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. கேக்குகள், பிஸ்கட்டுகள், தானியங்கள் மற்றும் பல ஸ்நாக்ஸ்கள் இந்த வகையில் அடங்கும்.
தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள்:
பி.எச்.ஏ (புடிலேடட் ஹைட்ராக்ஸிஅனிசோல்): இது உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் நீடித்து வருவதற்காக கலக்கப்படும் வேதிப் பொருள். இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக் கூடியது. உருளைக் கிழங்கு சிப்ஸ், சூயிங் கம், பாஸ்ட் புட் செரியல்ஸ் வகைகளில் கலக்கப்படுகிறது.
சோடியம் நைட்ரேட் : உணவுக்கு நிறம் ஊட்டவும், சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கவும் சேர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மாமிசம் பதப்படுத்தப் பயன்படுகிறது. வயிற்று வலி, மூளை மற்றும் சிறுநீரக புற்று நோய், தலை வலி, வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். எனவே, பதப்படுத்தப்பட்ட மாமிசங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
செயற்கை வண்ணம் மற்றும் வாசனைப் பொருட்கள்: சிப்ஸ், குக்கிஸ் போன்ற பேக்கிங் <உணவு வகைகளின் தயாரிப்பில் பயன்படுகிறது. ஒவ்வாமை, கிறுகிறுப்பு போன்ற விளைவுகள் ஏற்படும். பிரிலியண்ட் ப்ளு, டார்ட்ரஜைன், சன்செட் மஞ்சள் போன்ற செயற்கை நிறங்கள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கலப்பான்கள்: இவை ஐஸ்கிரீம்கள், பிஸ்கட்கள், ரொட்டி தயாரிப்புகளில் அதிகம் பயன்படுகின்றன. அதிகம் உட்கொள்ளும் போது குடலில் ஒவ்வாமை ஏற்படுகிறது.
மோனோ சோடியம் குளுடமேட்: குளுடாமிக் அமினோ அமிலத்தின் சோடியம் உப்பான இது நூடுல்ஸ், சிப்ஸ், ஸ்நாக்ஸ் உணவுத் தயாரிப்பில் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது. இதனால் தலைவலி, இதய படபடப்பு, நெஞ்சு வலி, மூளை மற்றும் ஜீரண மண்டல பாதிப்பு ஏற்படுகிறது.
உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
சேலம் : விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகம் வாசகர் மன்றம், சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு, சுற்றுப்புறச்சூழலும் உணவு பாதுகாப்பும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம், விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகத்தில் நடந்தது. கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூபதி தலைமை வகித்தார்.
செயலாளர் சங்கர் வரவேற்றார். மாவட்ட நியமன அலுவலர் மற்றும், உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறை அலுவலர் அனுராதா பேசியதாவது: சுற்றுப்புறம் பாதிப்பால், 95 சதவீதம் உணவும் பாதிக்கிறது. ஜவ்வரிசி, பருப்பு, ஆயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் கலப்படம் உள்ளது. வெல்லம் உற்பத்தி செய்வதிலும், கலப்படம் செய்கின்றனர்.கறும்புச்சாறு இல்லாமலே வெள்ளம் தயாரிக்கின்ற நிலை, தற்போது உருவாகியுள்ளது. வெல்லம் தயாரிப்பதற்கு, சூப்பர் பாஸ்பரஸ் உள்ளிட்ட பொருட்களை கலக்கின்றனர். வெல்லம் கெட்டித்தன்மை வருவதற்கு, ஐந்து வகையான சோடாக்களையும், கலர் வருவதற்கு கலர்பொடிகளையும் கலக்கின்றனர்.இது போன்ற கலப்படத்தை ஓமலூர் பகுதியில் தயார் செய்கின்றனர். ஆரம்ப கட்டத்தில் ஜவ்வரிசி, வெல்லம் ஆகியவற்றில் கலப்படம் செய்வதை தடுத்தோம். தற்போது, அவை மீண்டும் வளர்ச்சி பெற்று விட்டது. நூடுல்ஸினால் ஏற்படும் பாதிப்பு பற்றி பள்ளி, கல்லூரிகளில், விழிப்புணர்வு செய்கிறோம்.இவ்வாறு பேசினார்.பொருளாளர் பிரபாகரன், சேலம், கிரிலா ஹவுஸ் கிரிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் சின்னதம்பி நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)