Feb 24, 2018

``உணவு என விற்பனை செய்யப்படுபவை பெரும்பாலும் விஷங்களே!’’ - மருத்துவர் கு.சிவராமன்

இன்று நாம் மிகப் பெரிய வணிக வன்முறையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் சாப்பிடும், உங்கள் தட்டில் பரிமாறப்படும், கடைகளில் தேடிப்பிடித்துச் சாப்பிடும் அத்தனை உணவுகளும் எப்படிப் பயிராக்கப்படுகின்றன... எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன... எப்படிப் பக்குவப்படுத்தப்படுகின்றன... எப்படிப் பரிமாறப்படுகின்றன... என அனைத்துப் படிநிலைகளையும் ஆராயவேண்டியிருக்கிறது. அப்படி ஆராய்ந்தால், இவை அனைத்திலும் வணிக வன்முறை தலைத்தூக்கி நிற்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
அண்மையில் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் `சேவ் ஃபுட்ஸ் ஃபெஸ்டிவல்’ (Save Foods Festival) என்ற விழா நடந்தது. அதில்
சித்த மருத்துவர் கு.சிவராமன் பங்கேற்று உரையாற்றினார்... தன் உரைக்கு அவர் மையப் பொருளாக எடுத்துக்கொண்டது இந்தப் பிரச்னையைத்தான். `எல்லாவற்றையும் வணிகமாக்கிவிட்ட இன்றைய நவீன உலகம் உணவையும் விட்டுவைக்கவில்லை’ என்ற நிதர்சனமான உண்மையை விரிவாகப் பேசினார் சிவராமன்... ``ஒரு காலத்தில் தொற்றுநோய்கள்தான் நமக்கு ஆபத்தானவையாக, உயிர்கொல்லியாக இருந்திருக்கின்றன. குறிப்பாக, இந்தியா சுதந்திரமடைந்த நாள்களில் அதாவது 1947-க்குப் பிந்தைய காலத்தில் காலரா, காசநோய், பிளேக் போன்ற தொற்றுநோய்களின் தாக்கம்தான் இங்கே அதிகமாக இருந்தது. இன்றைய மருத்துவ உலகம் இவற்றையெல்லாம் வெகுவாகக் குறைத்துவிட்டது. ஆனாலும், தொற்றுநோய்கள் அல்லாத பிற வாழ்வியல் நோய்களான சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், உளவியல் நோய்கள் போன்றவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கின்றன. இதற்கு, நம் குடும்பத்திலேயே நிச்சயம் ஓர் உதாரணம் இருக்கும். மாறுபட்டுப்போன நமது உணவுப் பழக்கமும், அதைத் தனது சந்தைப்படுத்துதலின் மூலம் சாதித்துக்கொண்டிருக்கும் வணிகர்களும்தான் இதற்கான காரணம்’’ என்றவர், நம் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
``வியாபாரமயமாகிப் போன இன்றைய உணவும், உணவுக்கான விலையும் சாமானியர்களை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. இந்த வியாபாரம் எங்கிருந்து தொடங்கியது?’’
``இது இன்று நேற்றல்ல... விவசாயம் என்றைக்கு விவசாயத் தொழில் நிறுவனங்களாக உருமாறியதோ, அன்றைக்கே உணவு வியாபாரமும் தொடங்கிவிட்டது. விளைவித்தவனுக்கும், உணவை உண்பவனுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இன்றைய வணிகத்துக்குப் பெரிய சந்தையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இவர்களுக்கு இடையிலிருக்கும் வணிகர் மட்டுமே இதில் கொள்ளை லாபம் பார்க்கக்கூடியவராக இருக்கிறார். இதில் லாபம் வாடிக்கையாளருக்கும் இல்லை, உற்பத்தி செய்பவருக்கும் இல்லை. இதன் விளைவாகத்தான் நாம் இன்று நோய்களையும், விவசாயிகளின் தற்கொலைகளையும் சந்தித்துவருகிறோம். விவசாயிக்கு வருமானம் இல்லை, வாடிக்கையாளருக்கு சத்தான உணவு இல்லை. இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், நியாயமான வர்த்தக நடைமுறையைக் (Fair trade practice) கொண்டுவர வேண்டும். இதனால் மட்டுமே உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் நியாயமான பகிர்தலை உருவாக்க முடியும்.’’
``சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பர்ய உணவு உண்பதை ஓர் அவமானமாகப் பார்க்கிறார்கள். மேலைநாட்டு உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுகிறார்கள். மற்ற நாடுகளின் தட்பவெப்பநிலைக்கு உகந்த அந்த உணவுகள் நம் நாட்டு தட்பவெப்பநிலைக்கு உகந்ததாக இருக்குமா?’’
``உணவை நிச்சயம் உலகமயமாக்க முடியாது. ஜெர்மனியில் ஓடும் காரை இந்தியாவில் ஓடச் செய்யலாம். ஆனால், ஜெர்மனியில் சாப்பிடும் உணவை இந்தியாவில் உண்ண முடியாது. ஒருவரின் உணவுப் பழக்கம், அவர் வசிக்கும் தட்பவெப்ப நிலையையும், அவருடைய மரபணுவையும், அவர் செய்யும் தொழிலையும், அவரின் மனதையும் சார்ந்தது. இத்தாலியில் இருக்கும் பீட்சாவை நாம் சாப்பிடுவது, நம் மரபணுவுக்குப் பரிச்சயமில்லாத ரசாயனக் கலவையை உட்கொள்வது போன்றது. இந்த உணவுப் பழக்கம் வேறுவிதமாக வினையாற்றி, புதுப் புது நோய்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.’’
``இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறை மிகவும் குறைந்துவிட்டது. இன்றைய அவசர உலகில், காலை உணவைத் தவிர்ப்பது, `குப்பை உணவுகள்’ என்று குறிப்பிடப்படும் உணவுகளைச் சாப்பிடுவதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்?’’
``நம்முடைய மருத்துவத்தின்படி காலை உணவு மிக முக்கியமான ஒன்று. இன்று பலரும் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு ஓட்ஸ் கஞ்சியைக் குடிக்கிறார்கள். உண்மையில் ஓட்ஸ் என்பதை குதிரைகளுக்குத்தான் கொடுப்பார்கள். இன்று `ஓட்ஸ்’ என்ற பெயரில் அவல் போன்று விற்கப்படுபவை, பல ரசாயனக் கலவைகளைக் கொண்டு பயிரிடப்பட்டு, பல்வேறு மாறுதல்களுக்குப் பிறகு வெறும் சக்கையாக மட்டுமே சந்தைக்குக் கொண்டுவரப்படுன்றன. இந்தியாவில் இருக்கும் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம் போன்றவைதான் சிறந்த காலை உணவாக இருக்க முடியும். இவை தவிர இட்லி, தோசை, கம்மங்கூழ், தினைப் பொங்கல் போன்றவற்றையும் நாம் காலை உணவாகச் சாப்பிடலாம். இவற்றைச் சாப்பிட முடியவில்லையென்றால், வாழைப்பழம், கொய்யாப்பழம், பப்பாளிப்பழம் அல்லது கைக்குத்தல் அவல் போன்றவை சிறந்த காலை உணவுகள்.’’
``இந்தியாவில் இளம் பெண்களை அதிகமாக அச்சுறுத்தும் நோய்கள் எவை?’’
``நான் மருத்துவக் கல்லூரியில் படித்த நாள்களில், `மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரலாம்?’ என்ற கேள்வி எழும்போதெல்லாம், திருமணம் ஆகாத, பால் புகட்டாத மகளிருக்கு முதுமையில்தான் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நினைத்தோம். இந்த வருடக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பரவலாகக் காணப்படும் மார்பகப் புற்றுநோய் 30 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களைத் தாக்கக்கூடியதாக மாறியிருக்கிறது. இளம் பெண்களைத் தாக்கும் மற்றொரு நோய் சினைப்பை நீர்க்கட்டிகள் (Polycystic ovarian disease). முன்பெல்லாம் இந்தக் கட்டிகள் யதேச்சையாக அல்ட்ரா ஸ்கேன் (Ultra scan) மூலம் கண்டறியப்பட்டன. ஆனால், இன்று பத்தில் இரண்டு பெண்களுக்கு இந்தச் சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கட்டிகள் மூலம் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுவதோடு கருத்தரிப்பும் தள்ளிப்போகும் அபாயமும் இருக்கிறது. இதனால் பெண்கள் மனம், சமூகம், பொருளாதாரம்... என எல்லாவற்றாலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.’’
``நீங்கள் சொல்லும் `உணவே மருந்து’ என்ற கருத்து மக்கள் மத்தியில் தவறாகப் பொருள்கொள்ளப்படுகிறதே... `உணவு’ என்ற பெயரில் நாம் இன்று உண்பதெல்லாம் உணவுதானா... நீங்கள் `உணவே மருந்து’ என்னும் பெயரில் குறிப்பிடுவது எதை?’’
``இன்று உணவு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுபவை பெரும்பாலும் விஷங்கள்தான்! நாம் இங்கு உணவு என்று சொல்வது நமது மரபு சார்ந்த உணவுகளை. நாம் பாரம்பர்யமாக விளைவித்துவரும் உணவுப் பொருள்கள்தான், அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு.’’
``இன்று தூக்கம் முதல் பசி வரை எல்லாவற்றுக்கும் மருந்து, மாத்திரைகள் பெருகி வருவதுபோல், சமீபத்தில் அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதற்கான காரணம் என்ன... இதற்கு சித்த மருத்துவம் கூறும் தீர்வு என்ன?’’
`` `மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.’
- இதுதான் சித்தமருத்துவம் கூறும் அடிப்படைக் கருத்து. நாம் சாப்பிட்ட உணவு முழுமையாக ஜீரணித்து முற்றிலுமாக உட்கிரகிக்கப்பட்ட பிறகு, அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். இதைத்தான் சித்த மருத்துவம் `பசித்துப் புசி’ என்கிறது. ஆனால், இன்று பசி எடுக்காமலேயே பசி எடுக்க ஒரு மாத்திரை, உண்ட உணவைச் செரிக்கவைக்க ஒரு மாத்திரைஎன்று உட்கொள்ளும்போது அது நோயைக் கூட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் இன்றைய சமூகம் மருந்துகளுக்கு அடிமையாகிக்கிடக்கிறது.’’
உணவு என்ற பெயரில் நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மிகப்பெரிய சந்தையும், அதனால் நாம் சந்திக்கப்போகும் பின்விளைவுகளும், நினைப்பதைவிட மிகக் கொடியதாக இருக்கும் என்பதை மிக அழகாகச் சொன்னார் மருத்துவர் சிவராமன். அதற்கு அவர் மேற்கோள் காட்டிய வரி... ``இந்த ஒரு தலைமுறைதான் தன் அடுத்த தலைமுறையின் மரணத்தை அருகிலிருந்து பார்க்கப் போகும் தலைமுறை.’’
``அப்படி கடைசி தலைமுறை ஆகாமல் இருக்க வேண்டுமென்றால், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட, நம் நாட்டில் பாரம்பர்ய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உண்பதுதான் சிறந்த வழி’’ அழுத்தமாகச் சொல்கிறார் சிவராமன்.

``பானி பூரியில இதெல்லாமா சேர்க்கிறாங்க?’’ - அதிரவைத்த புகார், அலறவைத்த ரெய்டு

வட இந்தியாதான் பூர்வீகம். ஆனாலும், தமிழகத்தில் பலராலும் தவிர்க்க முடியாத நொறுக்குத்தீனி பானி பூரி. இந்த `கரகர’ ஸ்நாக்ஸ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஃபேவரைட். சென்னையின் முட்டுச்சந்தில்கூட குட்டி வண்டியில் பானிபூரி வியாபாரம் படுஜோராக நடந்துகொண்டிருக்க, அண்மையில் வாட்ஸ்அப்பில் வந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு தகவலும், அதற்காக உணவுப் பாதுகாப்புத்துறை எடுத்த நடவடிக்கையும் பானி பூரி பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. 

சென்னையிலிருக்கும் உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்தது அந்தப் புகார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் இதுதான்... `பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் பானிபூரிகளில் பான் மசாலா கலந்தது போன்ற சுவையும் மணமும் இருக்கிறது.’ 
நம் அன்றாட நொறுக்குத்தீனிகளில் ஒன்றாகிவிட்டது பானி பூரி. குழந்தைகளையும் இளம் வயதினரையும் அதன் சுவைக்கு அடிமையாக்கும் நோக்கத்தில், பான் மசாலா சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல இடங்களுக்கும் நேரில் சென்று சோதனை நடத்திவருகிறார்கள்.
பான் மசாலா சேர்த்தால் என்னென்ன பிரச்னைகள் வரும்? போதை மறுவாழ்வு மருத்துவர் அனிதா ராவிடம் பேசினோம். 
``பானி பூரியில் பான் மசாலா சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்தான் உறுதிசெய்ய வேண்டும். அதேபோல, இதுவரை சிகரெட், பீடி, புகையிலை போன்றவற்றுக்கு அடிமையானவர்களைப்போல, 'பானி பூரி அடிக்‌ஷன்' என்பதற்காக யாரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவேளை அப்படி பான் மசாலா சேர்த்திருந்தால், அது கண்டிப்பாக, பானி பூரிக்கு அடிமையாக்கும் நோக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம். பான் மசாலாவும் ஒருவகைப் புகையிலைப் பொருள்தான் என்பதால், புகையிலை (Tobacco) ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும். இது உண்மையெனத் தெரியும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்கிறார்.
இது குறித்து, உணவுப் பாதுகாப்பு அலுவலக எண்ணைத் தொடர்புகொண்டு பேசினோம்.
``பானி பூரியில் வட மாநிலத்தவர்கள் சிலர் பயன்படுத்தும் `மாவா’ போன்ற பான் மசாலாப் பொருள்கள் சேர்க்கப்படுவதாக புகார் வந்தது உண்மைதான். இந்தப் புகாரின் அடிப்படையில்தான் உணவுப் பாதுகாப்புத்துறை கமிஷனர் அமுதா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. சென்னையில் சௌகார்பேட்டை, புரசைவாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 22 பேர் 5 குழுக்களாகச் சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது பூரி, புதினா தண்ணீர், சாஸ், சமோசா... இவற்றைப் பொரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெயின் தரம்... என அனைத்தும் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றனவா எனச் சோதிக்கப்பட்டது. கசடு தங்கிய நிலையில் காணப்பட்ட புதினா தண்ணீர் உள்ளிட்ட சில கண்டுபிடிக்கப்பட்டு கால்வாயில் கொட்டி அழிக்கப்பட்டன. 
அதேபோல, தங்களுடைய பகுதியில் இதேபோல சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், தயங்காமல், '9444042322' என்ற உணவுப் பாதுகாப்பு அலுவலக எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் அல்லது வாட்ஸ்அப்பிலும் தகவல் தெரிவிக்கலாம். அந்தத் தகவல்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார் நம்மிடம் பேசிய அதிகாரி. 
பானி பூரி சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் சொல்கிறார்...
`
`உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மைதா, பேக்கிங் சோடா போன்றவைதான் பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தும் முக்கிய மூலப்பொருள்களாக இருக்கின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவந்தால் உடல் பருமன், சர்க்கரைநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. அந்த பூரியில் சத்துகள் பெரிதாக இல்லை என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரே எந்த அளவுக்குச் சுத்தமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. அதேபோல, கடைக்காரர்கள்,அந்த பூரியைப் பெரும்பாலும் தங்கள் கை விரல்களால் உடைக்கிறார்கள்; அதற்குள் மசாலாவை வைத்து, பானியில் முக்கித் தருகிறார்கள். அதனால், அவர்களின் கை விரல்களின் நகத்தில் படிந்துள்ள அழுக்குகளும் கையில் உள்ள அழுக்கும் பானியிலும் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. சுத்தம் இல்லாமல் பரிமாறப்படும் அதைச் சாப்பிடுவது, வாந்தி, வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தலாம். இது போன்ற சாலையோரக் கடைகளில், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டால் ஹெபடைடிஸ் ஏ தொற்று, டைஃபாய்டு காய்ச்சல் போன்றவை ஏற்படும் அபாயமும் இருக்கிறது. 
இது நம் மக்களின் பாரம்பர்ய உணவே அல்ல. எனவே, ஆசைக்காகச் சாப்பிட்டால்கூட என்றைக்காவது ஒருநாள் சாப்பிடலாம். அதுவும், முடிந்தவரை சுகாதாரமான தண்ணீர், ஆரோக்கியமான உணவுப் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொண்டு சாப்பிடுவது அல்லது வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சிறந்தது.’’ என்கிறார்

DINAKARAN NEWS


DINAMALAR NEWS


DINAKARAN NEWS


Food Safety team lifts samples for analysis

JAMMU, Feb 23: A Food Safety team led by Dr Parvesh Kumar, Assistant Commissioner Food Safety Jammu lifted the milk samples for analysis from various shops.
The team also comprised of Food Safety Officers namely Ajay Khajuria, Jai Inder, Hans Raj and Daleep Singh.
The milk samples were lifted for analysis from Jandial Cheese Corner, Sunil Cheese Corner and Gupta Milk Shop Sarwal.
The team also inspected the kitchens of Old Age Home Ambphalla and asked the management to provide nutritious and hygiene food to all old age members. The team also conducted inspection in Fruit Mandi Narwal and checked licences of the firms whether they have attained or not. The samples were lifted to analyze the agents of ripening of the fruits such as calcium carbide.
The team also conducted inspections in the food courts at City Square Mall and Dominos at Dogra Chowk. The team challaned Nai Delhi Fast Food Corner at Trikuta Nagar for lack of infrastructure and stopped its commercial activities.
Later, the team inspected Bar Bieque Nation at Greater Jammu and lifted samples of items which were without labeling and sent them to lab for analysis. Samples were also lifted from spices units from Shikara and Lajwab Spices at Gangyal. The team inspected the shops at Aquaf Market and asked them to improve their hygiene conditions.
Earlier, a workshop-cum-awareness programme was organized at Channi Himmat for food business operators. More than 50 business operators participated. They were told about FSS Act and asked to maintain norms as per act right from personal hygiene to hygiene level of cooking, processing of kitchen level along with serving to customers.

KMC to issue showcause notice to 3 packaged drinking water companies

Kolkata: The Kolkata Municipal Corporation (KMC) has decided to issue showcause notice to three noted packaged drinking water companies, after its food safety officers stumbled upon coliform bacteria in jars of these companies.
The civic body will also initiate legal steps against a number of companies dealing with packaged drinking water, even though they do not possess proper licence.
"The showcause notice will demand an explanation on the part of these companies as to why coliform bacteria, much above the permissible limit, have been found in their packaged drinking water jars, despite them having the stamp of Food Safety and Standards Authority of India (FSSAI). For the legal step against the unlicensed packaged water, we are waiting for the approval of the Food Safety Commissioner," Member, Mayor-in-Council (Health) Atin Ghosh said.
It may be mentioned that tests by the KMC laboratory had detected irregularities in as many as 12 of 15 bottles of packaged drinking water, three of them ostensibly from reputable brands. The samples were recovered after a joint raid by KMC food safety officers and the enforcement branch of state police.

Special checks cover small scale food business operators

Officials of Food Safety and Standards Authority of India inspecting food at a roadside eatery in the city. 
They are asked to register themselves with FSSAI
To ensure quality and hygiene in eatables sold by small scale food business operators (FBO), Food Safety Department is conducting checks in roadside eateries, push carts and mobile eateries in the district.
Such FBOs are also asked to register themselves with the Food Safety and Standards Authority of India (FSSAI).
B. Vijayalalithambigai, Designated Officer of FSSAI, Coimbatore, said that food safety officers were currently conducting the inspections at 2,000 odd small scale FBOs running roadside eateries, push carts and mobile eateries.
“We are primarily checking aspects such as hygiene and quality of the food served in such stalls. They need to be educated on cooking and storing foods in hygienic conditions, ill effects of using colouring agents and reheated oils. However, we have not lifted samples from such stalls as many of them are unaware of good practices to be followed,” said Ms. Vijayalalithambigai.
During visits to pani puri stalls, vendors have been asked to use gloves, and provide potable water at stalls.
As of now, around 50 small scale FBOs have obtained registration certificate from FSSAI in the district.
Many of them have applied for the registration which is under process.
While FBOs with annual turnover above ₹ 12 lakh is required to obtain a licence from FSSAI, those with annual turnover below ₹ 12 lakh are mandated to get a registration certificate.
“A meeting of small scale FBOs has been arranged on Saturday with the help of association members. They will be briefed on the registration and good practices to be followed,” said Ms. Vijayalalithambigai.
Meanwhile, FSSAI has advised all FBOs in Coimbatore to complete the registration and licence before February 28. As per estimation by FSSAI, there are 28,983 FBOs in Coimbatore which include those with annual turnover above and below ₹ 12 lakh a year.

Coimbatore street vendors audited by food safety officials

Audit part of the ‘Project Clean Street Vendors’ initiated by FSSAI in March 2016
Small food business operators in Tamil Nadu’s Coimbatore district are being audited for the past one week by state food safety officials.
The audit is being done to spread awareness about sanitary and hygiene practices among the vendors. It is part of the “Project Clean Street Vendors” initiated by the Food Safety and Standards Authority of India (FSSAI) in March 2016. The project was started to develop training and capacity building for street vendors and to ensure a proper regulatory system in order to stream line vendors under the Food Safety and Standards Act, 2006.
The audit is taking place during the night and an awareness camp is scheduled for February 24, 2018, in Coimbatore city to educate vendors about hygiene practices. Consumers are also being educated to eat or buy from registered and licensed vendors.
As part of the audit, officials are making sure that street vendors like panipuri stalls, food vans as well as local tea stalls do not add colouring agents to food. They have also advised them to use potable water, wear gloves, register and obtain licenses. The officials have tested tea being sold in the stalls for adulterants.
They have asked vendors to use banana leaves as packaging material instead of plastic. For tea, they have asked vendors to use glass cups to ensure that the beverage doesn’t get in contact with plastic as it is harmful says Vijayalalithambigai, designated officer of the Tamil Nadu food safety wing. She adds that the vendors are supposed to register by February 28, 2018. Till now, 18,231 vendors have registered and have obtained license under the Food Safety and Standards Act, 2006.