புது டெல்லி, ஜூலை, 19:
உணவு பொருட் களில் தரத்தை அள விட 12,000 தர விதி களை இந் திய உணவு பாது காப்பு ஆணை யம் இறுதி செய் துள் ளது.
மேகி நூடுல்ஸ் களில் அனு ம திக் கப் பட்ட அள வுக்கு அதி க மாக காரீ யம் மற் றும் மோனோ சோடி யம் குளுக் கோ மேட் சேர்த் தது பெரும் பிரச் னையை ஏற் ப டுத் தி யது. இதை ய டுத்து, மேகி நூடுல்ஸ் களுக்கு இந் திய உணவு பாது காப்பு தர நிர் ணய ஆணை யம் தடை விதித் தது. பின் னர் கடை களி லும், குடோன் களி லும் இருந்த நூடுல்ஸ் களை அழிப் ப தற் காக நெஸ்லே நிறு வ னம் திரும்ப பெற் றது. இப் பி ரச் னையை அடுத்து உணவு தரத்தை நிலைப் ப டுத்த சர் வ தேச பாது காப்பு விதி களுக்கு ஏற்ப விதி நிர் ண யிக்க உணவு பாது காப்பு ஆணை யம் முடிவு செய் தது.
உணவு பொருட் களில் சுவை யூட்டு வ தற் கா க வும், நீண் ட நாள் கெடா மல் பாது காக் க வும் பல் வேறு பொருட் கள் கூடு த லாக சேர்க் கப் ப டு கின் றன. இவற் றில் சில உடல் நலத் துக்கு கேடு விளை விப் ப தாக உள் ளது. தற் போது உணவு பாது காப்பு ஆணை யம் 375 விதி களை மட்டுமே உணவு தரத் துக் காக வகுத் துள் ளது. இதில் உண வில் சுவை யூட்டி க ளா க வும், கெடா மல் பாது காக் க வும் சேர்க் கக் கூ டிய பல பொருட் கள் பட்டி ய லி டப் ப ட வில்லை.
இதை ய டுத்து சர் வ தேச அள வில் உண வுக் கான தரக் கட்டுப் பாட்டு வி தி மு றை களை வகுக் கும் கோடெக்ஸ் அமைப்பு வகுத் துள்ள விதி களை பின் பற்றி, 12,000 தர விதி களை உணவு பாது காப்பு ஆணை யம் தற் போது இறுதி செய் துள் ளது.
இது கு றித்து சுகா தார அமைச் சக அதி காரி ஒரு வர் கூறு கை யில், ‘‘பாக் கெட் உணவு உட் பட, உணவு பொருட் களில் சேர்க் கப் ப டும் பொருட் கள் அன் றா டம் உட் கொள் ளும் போது உடல் நலத் தில் பாதிப்பு ஏற் ப டா மல் இருக் க வும், அதற் கான உரிய அளவு மிகாத வகை யில் விதி கள் வகுக் கப் பட்டுள் ளன. கோடெக்ஸ் அமைப் பின் விதி களை அடி யொற்றி சர் வ தேச தரத் துக்கு ஏற்ப இந்த மாற் றங் கள் செய் யப் பட்டுள் ளன. இது கு றித்து சட்ட அமைச் சக அதி கா ரி கள் ஆய்வு செய் கின் ற னர். உரிய அனு மதி பெற்ற பிறகு அறி விப்பு வெளி யி டப் ப டும் ’’ என் றார்.
விரை வில் அறி விப்பு வெளி யா கி றது