Jul 22, 2017
துரித உணவும்... அதிவேக நோய்களும்; ஆயுள் காலத்திற்கு வைக்கிறது வேட்டு
சிவகாசி: பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு கலாசாரம் நகரப்பகுதிகளில் 70 சதவீதம் ஆக்கிரமித்துவிட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சின்ன சின்ன நகரங்களில் கூட பாஸ்ட் புட் கடைகளில் சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கிறது. சாப்பிட ருசியாக இருந்தாலும், இந்த உணவுகள் பல்வேறு நோய்கள் உருவாவதற்கு சாத்தியம் ஏராளம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து உணவுகளை எடுத்துக் கொண்டால் இருதய கோளாறு, வயிற்று பிரச்னை போன்ற சகல நோய்களிலும் சிக்க வைத்து விடும் .ஆனால் பலரும்,நோய் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என் மனப்போக்கிலேயே வாழ்ந்து வருகின்றனர். இளம் பருவத்தில் உட்கொள் ளும் துரித உணவுகளில் தீங்கு உடனே தெரியவதில்லை. வயதாக நிலை தலைகீழாக மாறி உயிரே ஒரு நாள் எடுக்குமளவு சென்று விடுகிறது. குழந்தைகள் புரோட்டா,பர்க்கர்,போன்ற எளிதில் ஜீரணிக்காத மைதாவிலான பொருட்கள் உட் கொள்வதால் இரண்டாம் தர நீரழிவு நோயை வரவழைக்கிறது. பெண்களுக்கு எழும்புருக்கி நோய், ரத்த சோகை என பல ரக நோய்களை தருகிறது.
அலைமோதும் கூட்டம்
2016ம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் பாஸ்ட் புட் கலாசாரத்தில் 75 சதவீத மக்கள் உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதுபோன்ற கணக்கெடுப்பு பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில் எடுத்தபோது 50 சதவீத மக்கள் பாஸ் புட் உணவுகள் உட் கொள்வதால் பெரும் பிரச்னைக்கு ஆளானது தெரிந்தது. இதில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஆனால் இரவு 7:00 மணிவந்து விட்டால் போதும்
ஓட்டல்களில் துரித உணவுகளை வாங்க கூட்டமே அலைமோதுகிறது. இந்த வகை உணவில் எந்த சத்துக்களும் இல்லை என தெரிந்தும் நாம் வாங்கி உண்ண மறுப்பதில்லை. நாவிற்கு ருசி தருகிறது என்ற ஒரே காரணத்திற்காக நாம் உணவில் அடிமைப்பட்டிருக்கிறோம். இயற்கை உணவுகளில் சற்று சுவை குறைந்திருந்தாலும், அதனால் உடலுக்கு தீங்கில்லை. குடும்ப உறவுகளின் நலன் மீது அக்கறை செலுத்தி யோசித்து பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்க முன்வருவோமே...
தமிழ் கலாசார உணவு
சிவகாசி டாக்டர் ஸ்ரீதர் கூறுகையில், “ சராசரியான மனிதனில் ஆயுட் காலம் 100 என்ற நிலை மாறி தற்போது 60 வயது கூட தாண்ட முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என ஆராய்ந்தால் கடைசியில் வந்து நிற்பது உணவு பழக்க வழக்கங்கள் தான்.
உடலின் வளர்ச்சி காலகட்டத்தில் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, உடலுக்கு சேராத உணவுகளை உண்பது போன்ற பல காரணங்களால் நாம் பாதிக்கப்படுகிறோம். மனதும் சீராக இல்லாமல் டென்ஷன், கவலை போன்ற சிக்கல்களில் சிக்கி தவிப்பதால் இறப்பு கைக்கு எட்டிய துாரத்தில் வந்துவிடுகிறது. நம் முன்னோர்கள் பண்டைய காலகட்ட உணவு பழக்கவழக்கங்களில் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.
உணவு பழக்க வழக்கங்கள் மாறியதால் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் எளதில் தாக்குகின்றன. இதில் இருந்து விடுவிக்கும் முறைகள் நம் கைகளில் தான் உள்ளது. பாஸ்ட் புட் உணவுகளை முடிந்தளவு தவிர்த்து, தமிழ் கலாசார உணவுகளை உண்டு வாழுங்கள்,” என்றார்.------
Subscribe to:
Posts (Atom)