ஈரோடு, டிச. 27:
ஆட்டிறைச்சியுடன் மாட்டிறைச்சியை கலந்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளை நவீனப்படுத்துதல் மற்றும் சுகாதார விதிமுறைப்படி விற்பனை நிலையங்கள் அமைத்தல் தொடர்பாக 5 லட்ச ரூபாய் வரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக மானியம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பான கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சண் முகம் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மல் லிகா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளை சேர்ந்த உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்ட னர். அப்போது கோரிக்கைகள் குறித்து அவர்கள் பேசியதாவது:
மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை 4 மண்டலங்களாக உள்ளது. ஒவ்வொரு மண்டல பகுதிகளிலும் ஏராளமான கோழி, ஆடு இறைச்சி கடைகளும், மாட்டிறைச்சி கடைகளும் உள்ளன. அனைத்து இறைச்சி கடைகளையும் ஒரே பகுதிகளில் அமைக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் இடத்தை ஒதுக்கி அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய இறைச்சி கூடம் அமைத்து தரவேண் டும். ஒரு சில இறைச்சி வியாபாரிகள் ஆட்டிறைச்சியுடன் மாட்டிறைச்சியையும் கலந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் மாட்டுச்சந்தையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த மாட்டுச்சந்தையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். அனைத்து இறைச்சி கடைகளுக்கும் முறையாக லைசென்ஸ் வழங்க வேண்டும். பெருந்துறை பகுதிகளில் ஆடுகளை வெட்டுவதற்காக இறைச்சி கூடங்கள் இல்லை. அங்கு இறைச்சி கூடங்கள் அமைத்து தரவேண்டும்.
இவ்வாறு வியாபாரிகள் பேசினார்கள்.
மாநகராட்சி மேயர் மல்லிகா பேசுகையில், உணவாக பயன்படுத்தப்படும் இறைச்சிகளை சுகாதாரமான முறையில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆடுகளை அறுக்கும் இடத்தை யாரும் பயன்படுத்துவதில்லை. இறைச்சி கடைக்காரர்கள் அங்கு கொண்டு சென்று தான் ஆடுகளை அறுக்க வேண் டும். மாட்டுச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக் கை வைத்துள்ளீர்கள். ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாவட்ட கலெக்டர் சண்முகம் பேசுகையில், உணவு பாதுகாப்பு விதிகளின்படி சுகாதார முறைப்படி இறைச்சி விற்பனை நிலையங்கள், கத்தி முதல் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளும் வழங்க 5 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. உரிய விதிமுறைகளின்படி இறைச்சி கூடங்களை அமைத்தால் மட்டுமே இதற்கான மானியத்தை பெற முடியும். மாவட்டத்தில் பெரும்பாலான இறைச்சி கடைகளை சாக்கடை கால்வாய் மீது அமைத்துள்ளார்கள். இதனால் சுகாதாரகேடு ஏற்படும். இதை அனைத்து இறைச்சி வியாபாரிகளும் தவிர்க்க வேண்டும். ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியை கலப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய ஆய்வு நடத்தப்படும். நீங்கள் அமைக்கவுள்ள இறைச்சி கூடத்தின் திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் இந்த மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விற்பனை துறை, உதவி வேளாண்மை அலுவலகத்தில் பெற்று வேளாண்மை துணை இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி, மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, நகர்நல அலுவலர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.