Feb 2, 2014

ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு உணவு நிறுவனங்கள் லைசென்ஸ் பெற தவறினால்

சேலம், பிப்.2:
தமிழகம் முழுவதும் உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டல், மளிகை கடைகள், குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச்சட்டத்தின் கீழ் லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றிதழ் பெற நாளை மறுநாளுடன் (4ம் தேதி) காலகெடு முடிகிறது. லைசென்ஸ் பெறாத நிறுவனங்கள் மீது ரூ.5 லட்சம் அபராதம், 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் நாடு முழுவதும் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு கலப்படம் இல்லாமல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குவது இந்த சட்டத்தின் நோக்கமாகும். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறிய, பெரிய வணிகர்கள் அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரிடம் பதிவு செய்து, லைசென்ஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டப உணவுக்கூடங்கள், ஓட்டல்கள், மளிகை கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், பால்காரர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் கான்ட்ராக்டர்கள், ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், பேக்கரிகள், உள்ளிட்ட உணவுப்பொருள் தயாரிப்பில் உள்ள அனைத்து உணவு வணிகர்களும் உணவுப்பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் மாவட்ட நியமன அலுவலரிடம் லைசென்ஸ் பெற வேண்டும். ரூ.12 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்யும் வணிகர்கள், அந்தந்த ஒன்றியங்களில் உள்ள உணவு அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து பதிவு செய்தால் மட்டும் போதுமானது. இவர்கள், லைசென்ஸ் பெற தேவையில்லை. இதில் உணவு நிறுவனங்களை பதிவு செய்ய ரூ.100ம், லைசென்ஸ் பெற ரூ.2 ஆயிரமும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று உள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து கடந்தாண்டு வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு ஆண்டுக்குள் உணவகங்கள் மற்றும் கடைகள் பதிவு சான்றிதழ் மற்றும் லைசென்ஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் பதிவு சான்றிதழ் மற்றும் லைசென்ஸ் பெற்று வருகின்றனர். இந்த லைசென்ஸ் பெற நாளை மறுநாள்(பிப்.4ம் தேதி) கடைசி நாளாகும்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது: சேலம் மாவட்டத் தில் சிறிய மற்றும் பெரிய அளவில் 28 ஆயிரம் உணவு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், இதுவரை ரூ.12 லட்சத்துக்கு மேல் வணிகம் செய்து வரக்கூடிய 3100 நிறுவனங்கள் பதிவு செய்து லைசென்ஸ் பெற்றுள்ளன. 18 ஆயிரம் சிறு உணவு நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளன.
அரசு கல்லூரிகளில் இயங்கும் உணவு விடுதிகள், ரேஷன் கடைகள், சிவில் சப்ளைஸ் கிடங்கு, கோயில்கள் ஆகியவை 100 சதவீதம் முறைப்படி பதிவு செய்துள்ளன. 40 சதவீத தனியார் நிறுவனங்கள் இன்னும் பதிவு சான்றிதழ் மற்றும் லைசென்ஸ் பெறவில்லை. உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நாளை மறுநாள் (பிப்.4ம் தேதி)க்குள் லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், இடைப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட நகராட்சியிலும், மேச்சேரி, நங்கவள்ளி, மகுடஞ்சாவடி, ஓமலூர் உள்பட 20 ஒன்றியங்களிலும் பதிவு மற்றும் லைசென்ஸ் பெற அலுவலர்கள் உள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த ஒன்றியங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளனர். அவர்களிடம் விண்ணப்பம் செய்து லைசென்ஸ் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு டாக்டர் அனுராதா கூறினார்.
6 மாதம் சிறை தண்டனை உண்டு
விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி
ஒரு ஆண்டு அவகாசம் தேவை
இது குறித்து சேலம் சில்லரை மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி கூறுகையில், ‘‘அரசு உணவு பாதுகாப்பு தரநிர்ணயச்சட்டத்தை முழுமையாக மாற்றி அமைக்கவேண்டும். தற்போது இச்சட்டத்தின் கீழ் பதிவு மற்றும் உரிமம் எடுக்க காலஅவகாசம் பிப்.4ம் தேதி வரை உள்ளது. இச்சட்டத்தில் முழுமையான மாற்றங்கள் செய்யாத வரை இச்சட்டத்தை அமுல்படுத்தக்கூடாது.
தற்போது உள்ள காலவரம்பை மேலும் ஒரு வருடம் நீட்டிக்க வேண்டும். இது சம்பந்தமாக எங்கள் பேரமைப்பினர் கடந்த டிசம்பர் 10ம் தேதி டில்லியிலும், ஜனவரி 10ம் தேதி சென்னையிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தை சந்தித்து மனு அளித்துள்ளோம். அவர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பதிவு மற்றும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்றால் ரூ.5 லட்சம் அபராதம், 6 மாத சிறைத்தண்டனை என்று நோட்டீஸ் அளித்துள்ளனர். சட்டத்தில் முழுமையான மாற்றங்கள் செய்யவும் வரை மேலும் ஒரு வருட கால நீட்டிப்பு செய்ய வேண்டும்,” என்றார்.
ரூ.2 ஆயிரம் கட்டணம் அதிகம்
இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது: வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என எங்களுக்கும் எண்ணம் உள்ளது. ஆனால், உணவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டல்கள் பதிவு செய்து லைசென்ஸ் பெற ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இதை மூன்று ஆண்டுக்கு ஒருமுறை லைசென்ஸ் பெறும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும்.
லைசென்ஸ் கட்டணத்தை சிறு ஓட்டல்களுக்கு ரூ.500 ஆகவும், பெரிய கடைகளுக்கு ரூ.1000 ஆகவும் குறைக்க வேண்டும். அபராதம், சிறை தண்டனை என்பது வணிகர்களை மிரட்டுவது போல் உள்ளது. இச்சட்டத்தை மாற்றி அமைக்கும் வரை லைசென்ஸ் மற்றும் பதிவு செய்ய மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு ஓட்டல் உரிமையாளர்கள் கூறினர்.    

கலப்பட எண்ணெய்களால் உடல்நலம் பாதிப்பு: சுகாதார துறையினர் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


சென்னிமலை: 'கலப்பட எண்ணெய்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து, கலப்பட எண்ணெய் உற்பத்தியை தடை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ரசாயனம்:
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் எராளமான எண்ணெய் ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவை, பல கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணெய் உற்பத்தியில், கண்காணிப்பு இன்றி ஏராளமான கலப்பட எண்ணெய் உற்பத்தியாகிறது. இந்த எண்ணெய் நாடு முழுவதும், விற்பனை செய்வதால், மக்கள் உடல் நலம் பாதிப்புக்கு ஆளாகின்றனர். காங்கேயம் பகுதியில் தயாராகும், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயில், சல்பர் என்ற கொடிய ரசாயனம் கலக்கப்படுகிறது. இங்கு சல்பர் இல்லாமல், தேங்காய் எண்ணெய் உற்பத்தி இல்லை என்றே கூறலாம். தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு, முதலில் தேங்காயை உடைத்து, உலர் களத்தில் காய வைப்பர். தேங்காய் பருப்பில் பூஞ்சை வராமல் தடுக்க, தேங்காய் பருப்பை ஓரிடத்தில், மலைபோல் குவித்து, தார்பாய் மூடி, கொடிய ரசாயனமான சல்பரை, ஒரு இரும்பு சட்டியில் போட்டு அதன் அடியில் வைத்து, நெருப்பு இட்டு புகைக்க செய்வர்.
உடலுக்கு தீங்கு:
இப்புகை தேங்காய் முழுவதும் பரவி, தேங்காயின் மேற்பரப்பில், பனிபோல் வெள்ளை நிறத்தில் ஒட்டி, பூஞ்சை வராமல் தடுக்கும். ஐந்து நாளில் உலர வேண்டிய பருப்பு, இரண்டு நாளில் காய்ந்து, தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் பதத்துக்கு வந்துவிடும். இந்த சல்பர் கலந்த தேங்காய் பருப்பில் இருந்து, எண்ணெய் எடுத்து, விற்கின்றனர். தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் சல்பர் (கந்தகம்) உடலுக்கு தீங்கானது. சல்பர் கலந்த தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தினால், முடி உதிரும். புற்று நோய், நரம்பு மண்டல பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதற்கு ஒரு உதாரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிகிச்சைக்கு செல்வோரில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்தோர் அதிகம். இங்கு, சில நல்ல உற்பத்தி நிறுவனங்கள், சல்பர் கலப்படம் செய்யாமல், சுத்தமான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தயாரித்து விற்பனை செய்தாலும், சல்பர் கலந்த எண்ணெய் விற்பனையே அதிகம். இதனால், சில நிறுவன எண்ணெய் பட்டியலில், 'சல்பர் கலக்காத தேங்காய் எண்ணெய், உடலுக்கு கேடு விளைவிக்காதது' என, கூறி விளம்பரம் செய்கின்றனர். மாம்பழம் பழுக்க வைக்க கார்பைடு கல் பயன்படுத்துவதை தடுக்க, சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுப்பதுபோல, இவற்றையும் ஆய்வு செய்து, அந்நிறுவன உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும்.

Many hotels, eateries yet to register with food safety department

COIMBATORE: With a handful of days left for food business operators to apply for registration or license from Food Safety Standards Authority of India (FSSAI), it seems at least 50 per cent of food businesses in the district will miss the February 4 deadline. Out of the total 22,000 identified food business operators in Coimbatore, only 2841 licenses were issued till January 31, 2014 while another 7,000 have registered with the department.
"We have been actively trying to get all food business ranging from roadside hawkers to eateries, hotels and food manufacturers to either get registered or licensed as per the nature of their business before the deadline," said R Kathiravan, designated officer, Tamil Nadu Food Safety and Drug Administration Department (food safety wing).
The officials have 31 food safety officers in the district involved in keeping a check on the quality of food products that are being manufactured and sold. As per the present norms of the central FSSAI body, all food business operators with an annual turnover of less than Rs 12 lakh will have to get themselves registered with the local unit of the department whereas those exceeding this annual turnover limit will have to apply for license and get it issued to be eligible to operate and do business in the country. The procedure for getting registered is to apply with the department with valid ID and a set of 18 documents along with a processing fee of Rs 100 and licenses are issued on an annual basis and the renewal charge is Rs 200 per year.
"We have a set of strict guidelines and hygiene practises that are to be followed for getting the final approval for the license and registration. As of now the food safety wing could conduct raids and take action against those establishments without valid registration or license after February 4. We are waiting for further instructions in this regard," said Kathiravan.
As far as Coimbatore is concerned , the officials claimed they have issued licenses to over 383 hotels as on December 31 and were in the process of getting all major food establishments and eateries registered with them. Out of the 60 registered mineral water packaging units in the district, 45 of them have obtained license from the food safety wing and the remaining were in various stages of getting it done. They also added that they were having a tough time convincing small scale traders like regular provision and grocery store owners to register with the department.
"I have not taken any registration from the food safety department. Usually some officials from corporation come and ask us to show some license and we have to keep them happy. We have not applied for any separate license from the food safety department," said a provision shop owner near Redfields in the city.

Foodgrains merchants seek extension of time

Members of Tamil Nadu Foodgrains Merchants Association have submitted a memorandum to Union Minister for Health and Family Welfare Ghulam Nabi Azad, seeking one-year extension for the foodgrains merchants to register and get licence under the Food Safety and Standards Act, 2006, and Regulations of 2011.
In a press statement, S.P. Jeyapragasam, president of the association, said they had sought extension till February 4, 2015.
The association had also demanded the constitution of a committee comprising farmers, manufacturers, food business operators and scientists to confirm the new quality standards for the agricultural produce and to redress the shortcomings of the Safety and Standards Act, 2006, and Regulations of 2011.
“MP led team”
N.S.V. Chitthan, Member of Parliament, Dindigul Constituency, led the team that visited the Union Minister, the statement added.
The Ministry earlier fixed February 4, 2014 as the last date for merchants to register and obtain licence.

Milk manufacturing units to face action

The Tamil Nadu Food Safety and Drug Administration Department (Food Safety Wing) will file cases against four private milk manufacturing units in Coimbatore district for making substandard and misbranded products.
Samples were taken from six manufacturing units during the second week of January. Only two of them were found to conform to all the norms mandated by the Food Safety and Standards Act (FSSA), 2006, the Food Safety Wing Designated Officer R. Kathiravan told The Hindu here on Saturday.
These firms account for the bulk of the market share in Coimbatore district. The samples were taken as part of surveillance and protection measures and tested at the Government Food Analysis Laboratory here. They were investigated for fat and solid-not-fat (SNF) contents besides the presence of prohibited substances such as starch and adulterants.
The milk from two companies was found to have SNF component below the mandated levels.
The other two had not complied with the labelling norms as the sachet had not given the proper address of the manufacturing unit. While it was located at Coimbatore, the sachet contained an address in Kerala. A financial penalty would be imposed on all the four firms.
However, microbiological tests, vital to detect the growth of disease-causing organisms, were not performed at the laboratory as some equipment were still to be procured.
The Designated Officer said that such checks would be frequently conducted on various food businesses across the city. The FSS Act provided for imposing stringent penalties including imprisonment on those found violating the norms.
Dr. Kathiravan said that around 50 firms were approaching the Food Safety Wing every day for obtaining licences and registration.
The Food Safety and Standards Authority of India (FSSAI) has warned food business operators recently that the deadline for obtaining licences and registrations will not be extended again from February 4 this year. Following this, the Food Safety officials had launched an awareness drive across the city.
Coimbatore has one of the six food analysis laboratories accredited under the FSS Act. The others are in Chennai, Salem, Thanjavur, Tirunelveli and Madurai.

Food safety regulations are draconian: traders

‘The provisions are geared to wipe out Indian competition to multinationals’ 
Traders dealing in food who require to obtain a licence by February 4 in order to comply with the provisions of the Food Safety and Standards Act 2006 are up against the “draconian legislation,” said Praveen Khandelwal, Secretary General, Confederation of All India Traders (CAIT), the apex body representing the interests of retailers.
Speaking to The Hindu before addressing traders gathered under the auspices of the Federation of Karnataka Chambers of Commerce and Industry (FKCCI), Mr. Khandelwal said: “The deadline for mandatory licences for those retailing food is likely to be extended by another year, just as it was in the last two years.”
Mr. Khandelwal said the CAIT leadership, during its recent meeting with the Union Minister of Health and Family Welfare Ghulam Nabi Azad, had been assured them of a “favourable response.”
He said Union Minister for Communications and IT Kapil Sibal, whom he met on Friday, had assured them of a “favourable review” of the implementation of the legislation. “The legislation is not merely impractical but also sinister,” Mr. Khandelwal said.
He alleged that the provisions are geared to “wipe out” Indian competition to multinationals operating in the food business. “We have urged the government to review the legislation and spend the next year consulting all stakeholders so that we are left with a people-friendly legislation.”
Even nodal agencies under government control, such as the Food Corporation of India and the Central Warehousing Corporation, are not yet compliant with the legislation, he observed. “At this rate, even the Karnataka Chief Minister’s pet scheme, the Anna Bhagya, runs the risk of getting derailed,” he remarked.
Mr. Khandelwal also criticised Commerce and Industry Minister Anand Sharma’s recent observation that the decision by the State governments to allow foreign direct investment (FDI) in multi-brand retail was not open to reversal.
“Governments reviewing decisions is the very essence of democracy,” he quipped.

  • Traders dealing in food need to obtain licence by February 4
  • ‘The legislation is not merely impractical but also sinister’

  • Doctors suspect food poisoning, FDA sees insecticides as cause

    AURANGABAD: Doctors attending to the students who fell ill after having mid-day meal at the Jawahar Nagar school on Saturday said food poisoning appeared to be the prima facie cause, while mayor Kala Oza has ordered an inquiry into the incident.
    However, food and drug administration officials said the students might have come in contact of insecticides sprayed in the vicinity of the school. Nine girls and 14 boys from classes I to VII were served the food in batches.
    Head of the paediatric department Prashant Patil said the students were feeling nausea. A team of 15 doctors are monitoring the condition of the students, who have been kept under observation for 24 hours.
    Health officer in AMC Jayashree Kulkarni said it was a case of food poisoning. "Insecticide is sprayed daily throughout the city. If anyone comes in contact with it, the person shows different symptoms from what the students reported," she said.
    Assistant food commissioner, Food and Drug Administration, M D Shah, said the children might have come in contact with the insecticides. "We found that insecticide was sprayed in the surrounding, though we did not find samples of food."
    The International Society for Krishna Consciousness Food Relief Foundation (IFRF) provides meals cooked at the mostly automated setup. The organastion also plans to re-examine the entire system of food preparation to ensure the safety of the students.
    Sudershan Potbhare, in-charge of midday meal programme of Iskcon, said, "We have preserved the food sample and anyone can take it for analysis. We will cooperate with the investigation. From Monday, we will also inspect the places where the meals are served."