வேலூர், ஆக. 2:
ஆசையே துன் பத் துக்கு கார ணம் என் பது மகான் க ளின் வாக்கு. மண் ணாசை, பொன் னாசை, பெண் ணாசை என்ற இந்த மூன் றும் இன்று மனி தனை அலைக் க ழிக் கும் அம் சங் க ளாக உள் ளன.
இவற் று டன் மனி தன் நாக ரீக படிக் கட் டில் ஏறத் தொ டங் கி ய தும் அவன் கண் ட றிந் த வற் றுள் போதை வஸ் துக் க ளும் பாடாய் படுத் து கி றது.
ஆக வே தான் ஆன் றோர் கள் கள் ளுண் ணா மையை கட மை யாக் கி னர். ஆனா லும் இன்று அர சாங் கமே மதுவை விற் பனை செய் வ தால் போதைக்கு அடி மை யா கா த வர் களே இல்லை என்ற நிலை தமி ழ கத் தில் உரு வாகி வரு கி றது.
போதை யால் தனி ம னி தன், குடும் பம், சமு தா யம் என எல்லா வகை க ளி லும் பாதிப் பு களே ஏற் ப டு கின் றன.
படிப் ப டி யாக மனி தன் தன் னைத் தானே இழக் கும் நிலைக்கு போதைப் ப ழக் கம் அவனை தள் ளி வி டு கி றது.
போதைப் பொருட் க ளில் மது, ஹெரா யின், பெத் த னால் ஊசி, கஞ்சா, புகை யிலை, பான் மசாலா, போதை தரும் இன் ஹே லர் கள் இன் னும் பல வகை கள் அடங் கும்.
தமி ழ கத் தில் டாஸ் மாக் கடை கள் மூலம் அர சுக்கு ஆண் டு தோ றும் பல ஆயி ரம் கோடி வரு வாய் கிடைக் கி றது.
ஆனால், அத னால் அப் படி விற் பனை செய் யப் ப டும் மது வால் ஏற் ப டும் விளை வு கள் என் பது பயங் க ர மா ன தாக உள் ளது. அதி க ள வில் விபத் துக் கள், அதி க ள வில் உயி ரி ழப் பு கள், குற் றச் சம் ப வங் கள் என் பது டாஸ் மாக் மது வால் வரு கி றது என் பது சமூக ஆர் வ லர் கள் வைக் கும் குற் றச் சாட்டு.
அத னால் தான் தமி ழ கத் தில் பூரண மது வி லக்கு கொண்டு வர வேண் டும் என்று பொது மக் கள் குரல் கொடுத்து வரு கின் ற னர். இதை ய டுத்து தமி ழக அர சும் படிப் ப டி யாக மது விலக்கு அமல் ப டுத் தப் ப டும் என அறி வித் தது. முதற் கட் ட மாக 500 டாஸ் மாக் கடை களை முடி யது. அது வும் விற் பனை குறை வாக உள்ள கடை களை மட் டுமே மூடி யது.
இது ஒரு பு றம் என் றால் மது அல் லாத புகை யிலை சார்ந்த போதை பொருட் க ளும், ஹெரா யின், பிர வுன் சுகர் போன்ற போதை பொருட் க ளும் இளைய சமு தா யத்தை அழித்து வரு கி றது.
இதில் புகை யிலை சார்ந்த பொருட் களை விற் ப தற் கும் உப யோ கிப் ப தற் கும் தமி ழக அரசு தடை விதித் துள் ளது. ஆனா லும் இந்த தடையை மீறி புகை யிலை சார்ந்த பொருட் கள் விற் பனை அமோ க மாக நடை பெற்று வரு கி றது.
அண்டை மாநி ல மான ஆந் தி ரா வில் பான் ம சாலா உள் ளிட்ட போதை பொருட் கள் தடை யில்லை. இத னால் இங் குள் ள வர் கள் பலர் ஆந் தி ரா விற்கு சென்று புகை யிலை சார்ந்த பான் பராக், பான் ம சாலா பொருட் களை கொள் மு தல் செய்து நக ரின் பல பகு தி க ளில் சில் ல றை யில் விற் ப னை யில் செய் கின் ற னர்.
இதே போல் போதை தரும் சாக் லெட் டு கள் வடி வில் புதிய போதை வஸ் துக் கள் இன்று பள்ளி, கல் லூ ரி கள் என கல்வி போதிக் கும் நிலை யங் கள் முன்பு கன ஜோ ராக விற் ப னை யாகி வரு கி றது.
இதன் மூலம் நாட் டின் எதிர் கா ல மாக விளங் கும் இன் றைய இளைய சமு தா யத் தின் வாழ்க் கையே கேள் விக் கு றி யாக் கப் ப டு கி றது. இதனை கண் ட றிந்து தடுக்க வேண் டிய அரசு இயந் தி ரங் கள் வழக் கம் போல பெய ருக்கு ஆய்வு என்று நடத்தி வரு வாய் ஈட் டு வ தற் கான வழியை ஏற் ப டுத் திக் கொள் கின் ற னர்.
அதே போல் பெற் றோர் க ளும் தங் கள் பிள் ளை களை பள்ளி, கல் லூ ரி க ளுக்கு அனுப் பு வ து டன் தங் கள் கடமை முடிந் து விட் டது என்ற நிலை யில் செயல் ப டு கின் ற னர்.
எனவே, பள்ளி, கல் லூ ரி கள் உட் பட கல்வி நிலை யங் கள் அரு கில் போதை பொருட் கள், புகை யிலை பொருட் கள், போதை சாக் லெட் டு கள் நட மாட் டத்தை கண் ட றிந்து நட வ டிக்கை எடுப் ப து டன், குற் ற வா ளி களை சட் டத் தின் முன்பு நிறுத்தி எதிர் கால சமு தா யத்தை பாது காக் கும் உறு தி யான நட வ டிக் கையை அரசு எடுக்க வேண் டும் என் ப துான் சமூக ஆர் வ லர் க ளின் எதிர் பார்ப்பு.
தாரா ள மாக கிடைக் கும் போதை பீடாக் கள்
வேலூர் மாவட் டத் தில் குறிப் பிட்ட ஓட் டல் களை ஒட்டி பல பீடா கடை க ளி லும் போதை தரும் பீடாக் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. குறிப் பாக காந்தி ரோடு, பாபு ராவ் தெரு ஆகிய பகு தி க ளில் வட இந் தி யர் கள் தாரா ள மாக புழங் கு வ தால் இங் குள்ள பீடா கடை க ளில் மிக தாரா ள மாக சாதா ரண பீடா, போதை தரக் கூ டிய பீடா விற் பனை செய் யப் ப டு கி றது. அதே போல் சில பள்ளி மற் றும் கல் லூ ரி க ளின் அரு கில் உள்ள கடை க ளி லும் போதை பீடா விற் பனை செய் யப் ப டு கி றது. மாவட் டம் முழு வ தும் போதை பீடா விற் பனை வெகு ஜோ ராக நடக் கி றது.
போதை பொருட் கள் குறித்து போது மான விழிப் பு ணர்வு இல்லை
உலக மருத் துவ அறிக் கை யின் புள்ளி விவ ரப் படி உல கில் 2 கோடி பேர் ஹெரா யின் போதைப் பழக் கத் திற்கு அடி மை யா கி யுள் ள னர். இதில் அதிர்ச் சித் தக வல் என் ன வென் றால் தற் போது மேற் கத் திய நாடு க ளில் போதைப் பழக் கத் திற்கு அடி மை யா ன வர் க ளின் எண் ணிக்கை சத வி கி தத் தின் அடிப் ப டை யில் குறை யத் தொடங் கி யுள் ளது. ஆனால் ஆசிய நாடு க ளில் போதை அடி மை கள் அதி க மாகி வரு கின் ற னர். இதற்கு கார ணம் மேலை நா டு க ளில் ஏற் பட் டுள்ள விழிப் பு ணர்வு கீழை நாடு க ளில் இல் லா ததே ஆகும்.