Oct 3, 2014

DINAMALAR NEWS


ரஸ்க் கம்பெனி 'சீல்' அகற்றம்

காரைக்குடி: காரைக்குடி சுப்பிரமணியபுரம் 7 வீதியில் பெட்டிக்கடை ஒன்றில், அதே பகுதியை சேர்ந்த பெண் வாங்கிய ரஸ்க் பாக்கெட்டில், பல்லி இருந்ததாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த ரஸ்க் கம்பெனியில் ஆய்வு மேற்கொண்டனர். பல்லி இருந்த 'ரஸ்க் பாக்கெட் பேட்ச் எண்கள்' உள்ள பாக்கெட்களை குடோனில் வைத்து சீல் வைத்தனர். அந்த ரஸ்க் பாக்கெட், மதுரை உணவு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரஸ்க் தரமுள்ளது என ஆய்வு முடிவு வெளிவந்ததை தொடர்ந்து அதிகாரிகள் 'சீல்' அகற்றினர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருள்நம்பியிடம் கேட்டபோது, " கடந்த செப்., 22-ம் தேதி, ரஸ்க் பாக்கெட்டில் பல்லி இருந்ததாகவும், அதை சாப்பிட்ட பெண் வாந்தி எடுத்ததாகவும், வந்த புகாரின் அடிப்படையில் நேரில் விசாரித்தபோது, அந்த பெண் அது உண்மை என கூறினார். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தனியார் கம்பெனியில், ஆய்வு மேற்கொண்டு, அந்த பேட்ச் உள்ள ரஸ்க் பாக்கெட் அடங்கிய, குடோனை சீல் வைத்தோம். அந்த பாக்கெட் 'சாம்பிள்' ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவில், தயாரிப்பில் குறையில்லை, என வந்துள்ளது. இதன் அடிப்படையில், சீலை அகற்றியுள்ளோம், என்றார்.