சேலம் மாநகராட்சி ஆணையாளர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
சேலம் மாநகராட்சி பகுதியில் சாலை ஓரங்களில் பல்வேறு இடங்களில் ஆட்டு இறைச்சி கடைகள் செயல்படுகிறது. பொது மக்களுக்கு இடையூறாகவும், கடையில் விற்பனை செய்யப்படும் இறைச்சி சுகாதாரமின்றி உள்ளதாகவும் பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி சாலை ஒரங்களில் விடுமுறை நாட்களில் ஆட்டு இறைச்சி, மீன் போன்றவற்றை கடைகள் வைத்து விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. மாநகராட்சி எல்லைக்குள் எங்கும் சாலையோரங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்வதை தவிர்த்து விட்டு அவர்கள் நிரந்தர கடைகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது சாலை ஒரங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கடைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.