சேலம், அக்.5:
தீபாவளி பண் டிகையை ஒட்டி ஸ்வீட் கடைகள், திருமண மண் ட பம் உள்பட வெளியிடங்களில் பலகாரங்கள் தயாரிப்பதற்கு உணவு பாது காப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் பலகாரம் தயாரிப் பதை கண்காணிக்க குழுக் களை அமைக்கவும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கள் அறிவுறுத்தப்பட்டுள் ளனர்.
தீபாவளி பண்டிகை காலத்தில் வழக்கமாக ஸ்வீட் கடைகள் மட்டுமின்றி வீடுகளில் இனிப்பு வகை களை தயாரித்து விற்பனை யில் ஈடுபடுகின்றனர். தீபா வளி பண்டிகை அக்டோபர் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வா ரமே இருக்கும்பட்சத்தில் தமிழக முழுவதும் உள்ள மளிகைக்கடைகளில் இனிப்பு, கார வகைகள் தயா ரிக்க தேவையான பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
தீபாவளியையொட்டி சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஸ்வீட் ஸ்டால் மற்றும் திருமண மண்டபங்களில் இனிப்பு வகைகள் தயாரிக்கும் பணி யில் உரிமையாளர்கள் ஈடு பட தொடங்கியுள்ளனர். இவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்றும், அவற்றில் ஏதாவது கலப்படம் செய்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக் கள் அமைக்கப்படவுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது: தீபாவளி பண்டிகையயொட்டி மண்டபங்களில் இனிப்பு, காரம் வகைகள் தயாரிப்பவர்கள் கண்டிப் பாக சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கவேண்டும். பதிவு செய்யா மல் பண்டிகை கால இனிப்பு, கார வகைகள் தயாரிக்கக்கூடாது. பதிவு செய் யாமல் தயாரிப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
தயாரிக்கப்படும் பொருட்கள் எந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்து தகவல் கட்டாயம் அந்த பேக்கிங்கில் இருக்கவேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் இனிப்பு, கார வகைகளை வாங்கும்போது, அவை எந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்று கேட்ட வாங்கவேண்டும். மேலும் பொருட்களை வாங்கும் போது, சிறிதளவு சுவைத்து பார்த்து வாங்கவேண்டும். நாள்பட்ட பொருட்களை வாங்கவேண்டாம். இதனால் உடல் உபாதைகள் ஏற்படும்.
இனிப்பு, கார வகைகள் சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆத்தூர், மேட்டூர், இடைப்பாடி, சேலம் மாநகரத்தில் 6 குழுக் கள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 4 அதிகாரிகள் இருப்பார்கள். இதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களி லும் ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்படவுள்ளது.
ஸ்வீட் ஸ்டால் மற்றும் திருமண மண்டபங்களில் ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வின்போது இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட கலரைவிட கூடுதலாக கலர் இருக்கக்கூடாது, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், ஆயில், மைதாமாவு, சர்க் கரை உள்பட ஸ்வீட் மற்றும் காரம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். இந்த கட்டுபாடுகள் அனைத்தையும் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.
ஆய்வின்போது இனிப்பு வகைகளில் ஏதாவது கலப்படம் கலக்கப்பட்டு இருப் பது தெரியவந்தால், அந்த உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்படும். மேலும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சுகாதாரமாக இல்லாமல் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். இந்த ஆய்வு அக்டோபர் 10ம் தேதியில் இருந்து துவங்கி, தீபாவளி பண்டிகை வரை நடக்கும்.
இவ்வாறு டாக்டர் அனுராதா கூறினார்.