திருப்பூர் : "லேபிள்
இல்லாத உணவு பொருட்களை, பிப்ரவரி மாதத்திற்குள் பறிமுதல் செய்ய வேண்டும்;
மீண்டும் விற்பனையை தொடர்வோரை கைது செய்ய வேண்டும்' என, உணவு
பாதுகாப்புத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:விற்பனைக்கு
ஒரு பொருள் வருகிறது எனில் அதன் பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலவதியாகும்
தேதி, நிறுவனத்தின் போன் நம்பர், எடையளவு, தயாரிப்பு முறை, சைவமா; அசைவமா;
அதிகபட்ச விலை என, எட்டு விவரங்கள், அதன் மீது அச்சிடப்பட்டிருக்க
வேண்டும். உள்ளூரில் தயாரித்து விற்கப்படும் உணவு பொருட்கள் பலவற்றில், இவை
இருப்பதில்லை.
அத்தகைய பொருட்களை விற்பவர்களை கண்டறியும் நோக்கில், லேபிள் இல்லாமல் மார்க்கெட்டுக்கு வரும் உணவு பண்டங்களை, பிப்ரவரி 4க்குள் பறிமுதல் செய்யவும், விற்பனையை தொடர்வோரை கைது செய்யவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.