Oct 31, 2013

FSSAI NOTIFICATION


ஒரு வாரத்தில் உடல் எடையை குறைக்கும் மருந்துக்கு ரூ. 1120; தூத்துக்குடி உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் அம்பலம் மருந்துகள் அறைக்கு சீல் வைத்து அதிரடி, சேம்பிள் எடுத்து சோதனை எடையை குறைக்க விஐபிக்கள் சென்ற அதிர்ச்சி தகவலால் பரபரப்பு





தூத்துக்குடி: ஒரு வாரம் சர்பத் போன்ற பொருளை  சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும் என்று கூறி எந்தவித லைசென்ஸ் இல்லாமல் வீட்டில் கிளினிக் நடத்தி வந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து அதனை சீல் வைத்தனர். இந்த கிளினிக்கிற்கு அதிகாரிகள், வி.ஐ.பிக்கள் வந்து அதனை குடித்து சென்றுள்ள விபரம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி சிவன் கோயில் அருகில், அண்ணாநகர் 11வது தெருவில் உள்ள வீட்டில் ஹெர்பா லைப் என்கிற பவுடருடன் சில மருந்துகளை சேர்த்து சர்பத் போன்று தயாரித்து உடல் எடையை குறைப்பதற்காகவும், ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் வழங்கி வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இது சம்பந்தமாக டாக்டர் மற்றும் பொதுமக்கள்  சார்பிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிவன் கோயில் தெரு அருகே உள்ள இதுபோன்ற இடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்ற போது இந்த தகவலை முன் கூட்டியே தெரிந்து கொண்டே அந்த நபர் கடையை பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவபாலன், சந்திரமோகன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், டைட்டஸ் பெர்ணாண்டோ, நீதிமோகன் ஆகியோர் கொண்ட குழுவினர்  சாதாரணமாக புகாருக்குரிய வீட்டிற்கு உடல் எடையை குறைக்க டிரீட்மென்டிற்கு செல்வது போல் சென்றனர். நியமன அதிகாரி ஜெகதீஸ்சந்திரபோஸ் மற்றும் இரண்டு அலுவலர்கள் மட்டும் முதலில் வீட்டிற்குள் சென்றனர். மற்றவர்கள் வெளியில் நின்றுள்ளனர்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஜெகதீஸ் சந்திரபோஸ் அங்கிருந்த நபரிடம் கூற அவர்கள் ஒரு டம்ளரில் இருந்த சர்பத் போன்ற பொருளை குடிக்க  வேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடிக்க வேண்டும். மூன்றாவது நாளிலே ரிசல்ட் தெரியும். ஒரு வாரத்திற்கு மொத்தம் 1120 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜெகதீஸ்சந்திரபோஸ் சர்பத் போன்ற பொருளில் என்ன சேர்க்கிறீர்கள். இது என்ன வகையான மருந்து என்று கேட்கவும் ஹெர்பா லைப் என்னும் பவுடரில் சில மருந்துகளை
சேர்த்து தயாரித்துள்ளது. ஹெர்பா லைப்பில் என்ன மருந்துகள் சேர்ந்துள்ளது என்கிற விபரம் அதில் எழுதப்பட்டுள்ளது என்று காண்பித்துள்ளார்.
நீங்களே சர்பத் போன்ற பொருளை தயாரித்து உடல் ஆரோக்கியம், எப்போதும் சோர்வு இல்லாமல் இருக்கவும், எடையை குறைக்கவும், தொப்பையை அகற்றவும் இதனை குடித்தால் குணமாகிவிடும் என்று கூறுகிறீர்கள். இதனை எப்படி நம்ப முடியும். இதுபோன்று விற்பனை செய்வதற்கு லைசென்ஸ் எதுவும் பெற்றுள்ளீர்களா, அரசின் அனுமதி எதுவும் இருக்கிறதா, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் எதுவும் பெற்றுள்ளீர்களா என்று கேட்கவும் சம்பந்தப்பட்டவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது போன்று நீங்கள் கொடுக்க கூடிய சர்பத் போன்ற பொருள் என்ன  வேலை செய்யும் என்பதை சொல்லுங்கள் என்று கூறவும் குமாரால் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்தார்.
அண்ணாநகர் 11வது தெருவில் இந்த கிளினிக் போன்று நடத்தி வரும் ஜான் ஜேக்கப், மெர்சிராணி ஆகியோரிடமும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இதனை நாங்கள் நடத்துவதற்கு எங்களுக்கு கம்பெனி அனுமதி கொடுத்திருப்பதாக ஆங்கிலத்தில் பிரேம் செய்யப்பட்ட போட்டோவை காண்பித்தனர். அதனை பார்த்த உணவு பாதுகாப்புத்துறையினர் அதில் உள்ள முதல் பாராவை படித்து அதில் என்ன எழுதியுள்ளது என்று சொல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அதற்கு அவர்கள் சொல்ல முடியாமல் விழித்ததாக கூறப்படுகிறது.
இந்த கிளினிக்கிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், அரசு அதிகாரிகள், வி.ஐ.பிக்கள் என்று மக்கள் மிக அதிகமாக வந்து சென்றுள்ளது தெரியவந்தது. அண்ணாநகர் 11வது தெருவில் கடந்த சுமார் 6 மாதமாக இவை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எந்தவித லைசென்ஸ் இல்லாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி அந்த கிளிளின்கை சீல் வைக்க முதலில் அதிகாரிகள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் வீடோடு சேர்ந்து இருந்ததால் அந்த மருந்துகளை சேம்பிள் எடுத்த அதிகாரிகள் மருந்துகள் முழுவதையும் வீட்டின் ஒரு அறையில் போட்டு சீல் வைத்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த ஆய்வு, வாக்குவாதம் போன்ற பிரச்னையால் அந்த பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
மருந்து மாதிரி நெல்லையில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. ஆய்வு அறிக்கை வந்தவுடன் அந்த அறிக்கையின் பேரில் இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆய்வு அறிக்கை ஒரு வாரத்தில் வந்துவிடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது சம்பந்தமாக உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் ஜெகதீஸ்சந்திரபோஸ் கூறியதாவது;
தூத்துக்குடி அண்ணாநகரில் உடல் எடையை குறைப்பதாக கூறி போலியாக மருந்து வழங்கி வருவதாக டாக்டர் மற்றும் சிலரிடம் இருந்து புகார் வந்ததை தொடர்ந்து அண்ணாநகர் 11வது தெருவில் உள்ள கிளினிக் போன்று நடத்தி வரும் வீட்டில் சோதனை செய்தோம். ஹெர்பா லைப் என்னும் பவுடருடன் சிலவற்றை  சேர்த்து மிக்சியில் அரைத்து சர்பத் போன்றவற்றை மக்களுக்கு கொடுத்து வந்தனர்.
அவர்கள் என்னென்ன பொருட்கள் போட்டுள்ளனர் என்று தெரியவில்லை. அது சம்பந்தமாக விசாரணை செய்ததில் அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இதனால் இது போலியான சர்பத் போன்ற பொருளாகத்தான் இருக்கும். வாங்கிங் செல்வதும், அளவுக்கு சாப்பிடுதல், உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் தான் உடல் எடையை குறைக்க முடியும். இதுபோன்ற சர்பத் போன்ற போலி பொருட்கள் மூலம் எந்த காலத்திலும் உடல் எடை குறையாது. சாப்பிடும் போது ஆரோக்கியமாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் உடலில் பல்வேறு நோய்களை இதனை சாப்பிடும் போது உண்டாக்கி விடும். இதன் மூலம் உயிர் இழப்பு கூட ஏற்படும். இதுபோன்ற சில இடங்களில் மக்களை ஏமாற்றி உடல் எடையை குறைப்பதாக கூறி கொடுக்கப்பட்ட மருந்துகள் மூலம் சில ஆண்டுகளில் உயிர்இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். யார் எதனை சொன்னாலும் நம்பி வீணாக பணத்தை கொடுத்து நோயை உருவாக்கும் பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது. தூத்துக்குடியில் பிடிபட்டவற்றை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வு அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கிளினிக் போன்று நடத்த கூடாது. அவர்கள் வைத்திருந்த மருந்துகள் அனைத்தும் ஒரு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட நியமன அதிகாரி தெரிவித்தார்.

எச்சரிக்கையை மீறிய தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல்


கிருஷ்ணகிரி, அக்.31:
கிருஷ்ணகிரியில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கிருஷ்ணகிரி சார்பதிவாளர் அலுவலகம் அருகில் தனியார் மினரல் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந் நிறுவனம் ஐ.எஸ்.ஐ புதுப்பித்தலுக்காக விண்ணப்பித்ததன் காரணத்தினால், கட்டட பணி மற்றும் பகுப்பாய்வு கூடம் ஏற்படுத்தும் பொருட்டும், இயந்திரங்கள் பழுது அடையாமல் இருக்க அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இயந்திரங்களை இயக்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் பெறப்படும் தண்ணீரை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜசேகர், சேகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, அங்கு பெறப்படும் தண்ணீரை விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் கேன் மற்றும் தண்ணீர் பாக்கெட் மூட்டைகள் இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் அதிகாரியிடம் தகராறு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாத வாட்டர் கம்பெனிக்கு "சீல்'

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாமல் இயங்கி வந்த மினரல் வாட்டர் கம்பெனிக்கு சீல் வைக்க சென்ற உணவு பாதுகாப்பு அலுவலரிடம், உரிமையாளர் தகராறில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல மினரல் வாட்டர் கம்பெனிகள், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாமல் செயல்பட்டு வருவதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக வாட்டர் கம்பெனிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாமல் இயங்கி வந்த ஒன்பது மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஒரு மாதத்துக்கு முன், கிருஷ்ணகிரி, சேலம் சாலையில் இயங்கி வந்த பாலாஜி மினரல் வாட்டர் கம்பெனியில் ஆய்வு செய்த போது, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாமல் இயங்கியது தெரிந்தது.
ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற விண்ணப்பித்துள்ளதாக கம்பெனியின் உரிமையாளர் தெரிவித்தார். இதையடுத்து, தரச்சான்று பெறும் வரை மினரல் வாட்டர் தயாரிப்பை நிறுத்தி வைக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கி சென்றனர்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறமால், பாலாஜி மினரல் வாட்டர் கம்பெனியில் தொடர்ந்து வாட்டர் உற்பத்தி செய்து, விற்பனை செய்வதாக உணவு பாகதுகாப்பு துறைக்கு புகார் வந்தது.
நேற்று மதியம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணி தலைமையில், அதிகாரிகள் பாலாஜி மினரல் வாட்டர் கம்பெனியில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அதிகாரிகளின் அறிவுரையை மீறி அங்கு வாட்டர் தயாரிப்பது தெரிந்தது கம்பெனிக்கு சீல் வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அங்கு வந்த கம்பெனி உரிமையாளர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் கலைமணியை ஒருமையில் பேசி, சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, தகராறில் ஈடுபட்டார்.
அதிர்ச்சியடைந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், டாக்டர் கலைமணியை அங்கிருந்து பத்திரமாக மீட்டு, அழைத்து சென்றனர். பின் அதிகாரிகள் வாட்டர் கம்பெனிக்கு சீல் வைத்தனர்.

இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

நாகை, அக்.31:
நாகை கலெக்டர் முனுசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ள நம் நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. முக்கியமாக தீபாவளி போன்ற பண்டி கை காலங்களில் விதவிதமான இனிப்பு பலகாரங் கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பது வழக்கம். தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஸ்வீட், பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிமான நிறமிகளையோ பயன்படுத்த கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச்சீட்டு வைக்கும் போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருட்களின் பெயர், தயாரிப்பு மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள், கிருமி தோற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006ன்கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து உரிமம் பெற்று கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் இது தொடர்பான புகார்கள் ஏதாவது இருந்தால் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலரை, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் அலுவலகத்தை நேரிடையாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 04365 247060 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

Health drink centre raided

Food safety officers conducted a raid at a health-food drink centre at Anna Nagar here on Wednesday following complaints from consumers of health problems.
A team led by M. Jagadis Chandrabose, District Designated Officer, enquired those involved in promoting the product on the pretext of herbal medicine.
Dr. Chandrabose said that obese men and women were hoodwinked into buying the product, which had no documentary evidence to market. Moreover, the centre was being manned by persons with no knowledge of health and medicine, Dr. Chandrabose said after the investigation.
The team said it never seemed to have maintained standards for consumption. Hence, the officers had collected samples and sent to testing laboratory in Tirunelveli.

Health department raids sweets shops, seizes adulterated food items



PG-8 Oct 31_page1_image2

Jamshedpur : Beware of the coloured sweets sold in open market. They may contain harmful chemicals that will affect one’s health.
With Diwali round the corner, the district health department has embarked on a special drive to check the quality of sweets sold at various stalls across the city.
Led by district civil surgeon Jagat Bhusan Prasad accompanied by district food safety officer Mahesh Pandey, raid was carried out at two outlets.The team seized four samples sweets manufactured using milk products like khoa at popular sweet brand ‘Misti’ at Kumharpara in Kasidih.
“We have been receiving complaints of food adulteration from these unit and have collected samples which would be sent to food testing laboratory at Ranchi to- day evening,” said Jagat Bhusan Prasad.
He added that samples were being collected mainly to check adulteration and use of non-permitted colours. “Samples will be sent to the laboratory and based on its report action will be taken,” they added.
Use of harmful synthetic colours, including dyes were not permitted. But small manufacturers use the banned items just to give more colour to the sweets so as to make it attractive, offi- cials said.
Most of the sweets manufactured in the district were from the unorganised sector – houses or group of people joining together to make a fast buck.
Actions against the sweet manufacturer, after lab report would be initiated as per Food Safety and Standards Act 2006 (revised in 2012) and offenders found indulging in sale of adulterated products found unsafe for health would be liable for hefty fine of anything between Rs 25,000 and Rs 2 lakh.
When contacted Misti partner Achintam Kumar refuted charges of adulteration. “We are in business from 18 years and have been selling products without any report of adulteration.
We have faith that the lab report would come out in our favour,” said Achintam. The team after about an hour-long raid at the manufacturing unit of Misti then moved on to a newly opened outlet ‘Puja Misthan and Rasoi’ at Bhalubhasa. Raids would continue till Diwali (November 3) at other sweet outlets in the city.

Health dept raids sweet shops ahead of Diwali

Beware of the coloured sweets sold in open market. They may contain harmful chemicals that will affect one’s health.
With Diwali round the corner, the district health department has embarked on a special drive to check the quality of sweets sold at various stalls across the city. Led by district civil surgeon Jagat Bhusan Prasad accompanied by district food safety officer Mahesh Pandey, raid was carried out at two outlets.
The team seized four samples of sweets manufactured using milk products like khoya at popular sweet brand ‘Misti’ at Kumharpara in Kasidih. He added that samples were being collected mainly to check adulteration and use of non-permitted colours. “Samples will be sent to the laboratory and based on its report action will be taken,” they added.
Use of harmful synthetic colours, including dyes were not permitted. But small manufacturers use the banned items just to give more colour to the sweets so as to make it attractive, officials said. Most of the sweets manufactured in the district were from the unorganised sector - houses or group of people joining together to make a fast buck. Actions against the sweet manufacturer, after lab report would be initiated as per Food Safety and Standards Act 2006 (revised in 2012).
The team after about an hour-long raid at the manufacturing unit of Misti, moved on to a newly opened outlet ‘Puja Misthan and Rasoi’ at Bhalubhasa. Raids would continue till Diwali (November 3) at other sweet outlets in the city.

Ensure food safety

Dimapur, October 30 (MExN): The Directorate of Health & Family Welfare today issued a directive to the CMO and Food Safety Officers of the district “to conduct inspections of Hotels, Restaurants, Bakeries, Canteens- (Office/ College/ School/ Institutions) Tea stalls and other public eating places including Street food vendors under its respective jurisdictions to ensure safety of food at all levels.” 
In a statement by the Principal Director &Addl. Food Safety Commissioner, he informed that this directive was made “in view of festive seasons round the corner and the forth coming Hornbill festival and 50th year of celebration of the Statehood.” Furthermore, it was stated that the inspection be conducted in consultation with district administration and Town council and that the exercise should be completed by November 15, 2013 and to submit the “action taken report” on or before November 20, 2013. 
This directive was issued “in exercise of the powers conferred under Section 30 (3) of the Food Safety and Standards Act, 2006 and Rules 2011, the directive stated.

Ill-equipped health staff struggles to check adulteration Not a single case of adulterated khoya seized reported so far

Jalandhar, October 30
Ill-equipped and toothless, Health Department, has swung into action with skeleton staff to curb the supply of sweets made of adulterated dairy products and synthetic colours on the festival of lights across the district. Though the department has collected 89 samples of adulterated sweets and other raw material since last one month, not even a single seizure of adulterated “khoya” has been made so far.
City is a hub of sweetmeat and used to smuggle adulterated “khoya” from Saharanpur, Gurdaspur and neighbouring states before festive season.
The department has filed four cases under the provisions of the Food Safety and Standard Act, 2006, in the court against defaulters as of now, claimed District Health Officer (DHO), Dr Balwinder Singh.
The DHO said the smuggling of adulterated, synthetic and substandard raw and finished commodities had nearly stopped with the Punjab Health Department coming down heavily on such traders, some years ago.
He, however, did rule out the possibility if any one smuggles it by using their personal cars and storing it in domestic refrigerators.
The DHO revealed that out of the sample collected, 25 were of milk and dairy products, 15 of sweets while rest of other eatables.
The violators, if found guilty, has to undergo imprison from three to seven years besides a penalty upto Rs 1 lakh, as per provisions of the Act.
The department is cracking down on the violators with skeleton staff of just six employees, including a District Health Officer, two Food Safety Officers, and three class IV employees.
Moreover, the report of samples, collected and sent by the department to a Chandigarh based government laboratory, takes over one month to reach Jalandhar and by then a number of violators got scot-free by mounting pressure on the health authorities, a senior officer revealed.