Oct 31, 2013

எச்சரிக்கையை மீறிய தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல்


கிருஷ்ணகிரி, அக்.31:
கிருஷ்ணகிரியில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கிருஷ்ணகிரி சார்பதிவாளர் அலுவலகம் அருகில் தனியார் மினரல் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந் நிறுவனம் ஐ.எஸ்.ஐ புதுப்பித்தலுக்காக விண்ணப்பித்ததன் காரணத்தினால், கட்டட பணி மற்றும் பகுப்பாய்வு கூடம் ஏற்படுத்தும் பொருட்டும், இயந்திரங்கள் பழுது அடையாமல் இருக்க அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இயந்திரங்களை இயக்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் பெறப்படும் தண்ணீரை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜசேகர், சேகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, அங்கு பெறப்படும் தண்ணீரை விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் கேன் மற்றும் தண்ணீர் பாக்கெட் மூட்டைகள் இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் அதிகாரியிடம் தகராறு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாத வாட்டர் கம்பெனிக்கு "சீல்'

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாமல் இயங்கி வந்த மினரல் வாட்டர் கம்பெனிக்கு சீல் வைக்க சென்ற உணவு பாதுகாப்பு அலுவலரிடம், உரிமையாளர் தகராறில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல மினரல் வாட்டர் கம்பெனிகள், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாமல் செயல்பட்டு வருவதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக வாட்டர் கம்பெனிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாமல் இயங்கி வந்த ஒன்பது மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஒரு மாதத்துக்கு முன், கிருஷ்ணகிரி, சேலம் சாலையில் இயங்கி வந்த பாலாஜி மினரல் வாட்டர் கம்பெனியில் ஆய்வு செய்த போது, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாமல் இயங்கியது தெரிந்தது.
ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற விண்ணப்பித்துள்ளதாக கம்பெனியின் உரிமையாளர் தெரிவித்தார். இதையடுத்து, தரச்சான்று பெறும் வரை மினரல் வாட்டர் தயாரிப்பை நிறுத்தி வைக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கி சென்றனர்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறமால், பாலாஜி மினரல் வாட்டர் கம்பெனியில் தொடர்ந்து வாட்டர் உற்பத்தி செய்து, விற்பனை செய்வதாக உணவு பாகதுகாப்பு துறைக்கு புகார் வந்தது.
நேற்று மதியம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணி தலைமையில், அதிகாரிகள் பாலாஜி மினரல் வாட்டர் கம்பெனியில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அதிகாரிகளின் அறிவுரையை மீறி அங்கு வாட்டர் தயாரிப்பது தெரிந்தது கம்பெனிக்கு சீல் வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அங்கு வந்த கம்பெனி உரிமையாளர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் கலைமணியை ஒருமையில் பேசி, சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, தகராறில் ஈடுபட்டார்.
அதிர்ச்சியடைந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், டாக்டர் கலைமணியை அங்கிருந்து பத்திரமாக மீட்டு, அழைத்து சென்றனர். பின் அதிகாரிகள் வாட்டர் கம்பெனிக்கு சீல் வைத்தனர்.

No comments:

Post a Comment