குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட் களுக்கு தமிழகம் உட்பட 29 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டாலும் தமிழகத்தில் அவை பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வாய்ப் புற்றுநோய் பாதிக் கப்பட்ட இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக் கின்றன.
குட்காவுக்கு தடை விதிப்பதற்கான மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ல் இயற்றப் பட்டு, 2011-ம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்பே குட்காவுக்கு படிப்படியாக மாநிலங்கள் தடை விதித்தன. ஆனால், மத்திய அரசுக்கே முன்னோடியாக தமிழகத்தில் 2001-ம் ஆண்டே மேற்கண்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது இங்கு அவை பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்றன.
உணவு செலவை மிச்சப்படுத்த..
இதுகுறித்து வட மாநில தொழி லாளர்கள் சிலர் கூறும்போது, “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் குட்கா உற்பத்தி குடிசைத் தொழில் போல நடக்கிறது. இவை வீரியம் குறைந்த குட்கா மற்றும் பான் மசாலாக்கள். இவை அல்லாமல் ‘பான் ஷாப்’ மற்றும் சில ரகசிய இடங்களில் துண்டு பொட்டலங்களில் மடித்து குட்கா விற்பனை செய்யப்படுகின்றன. காலையில் ஒன்றை வாயில் ஓரமாக ஒதுக்கிக்கொண்டால் நாள் முழுவதும் போதை நீடிக்கும். பசி எடுக்காது. உணவு தேவையில்லை. விலை ரூ.15 முதல் 20 வரை மட்டுமே. எங்களுக்கு கூலி குறைவு என்பதால் உணவு செலவு மிச்சம்” என்றனர்.
எப்படி தயாரிக்கிறார்கள்?
இதுகுறித்து பேசிய உற்பத்தியா ளர் ஒருவர், “பாக்குத் தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை, காட்ச்சு (catechu) அமிலம் (பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் சாயப்பட் டறைகளில் பயன்படுத்தப்படும் catechol chemical), மண்ணெண் ணெய், சுண்ணாம்பு, பேக்கிங் சோடா (sodium bicarbonate) இவையே குட்காவுக்கான கச்சா பொருட்கள். சுண்ணாம்பை கொதிக்கவைத்து அதில் பேக்கிங் பவுடர், மண்ணெண் ணெய், பாக்குத் தூள், புகையிலை மற்றும் சில ரசாயனங்களைக் கலப் பார்கள். இது லேகியம் பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து பொட்டலம் கட்டி விற்கிறார்கள்” என்றார்.
வாயை ஓட்டை போட்ட ப்ரஷ்
திருப்பூரில் டான் போஸ்கோ கூடு அமைப்பின் உதவி இயக்குநர் ஜான் தர்மன் ‘தி இந்து’விடம் கூறும் போது, “எங்களிடம் உள்ள சுமார் 40 போதை அடிமை நோயாளிகளில் 10 பேர் குட்கா போன்ற மெல்லும் வகை புகையிலை போதைக்கு அடிமையானவர்கள். இவர்கள் அனை வரும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களே. இதுபோன்ற நோயின்போது வாயின் உட்புறம் பாதிக்கப்பட்டிருந்தாலும் மரத்துப் போனதன் காரணமாக வலி தெரிவது இல்லை. கடந்த வாரம் சென்னையை சேர்ந்த ஒரு சிறுவன் ப்ரஷ்ஷால் பல்விளக்கிக் கொண்டிருந்தபோது அவனையும் அறியாமல் கன்னத்தின் உட்புறமாக ஓட்டை போட்டு ப்ரஷ் வெளியே வந்துவிட்டது. இவர்களுக்கு தொடர்ச்சியான கவுன்சிலிங், மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தி வருகிறோம்” என்றார்.
6 மணி நேரத்துக்கு ஒரு மரணம்
இந்தியாவில் 27 கோடி பேர் குட்கா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை பயன் படுத்துகின்றனர். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு புற்றுநோய் உள்ளது. இங்கு புகையிலைப் பொருட்களின் விற்பனை மூலம் ஆண்டுக்கு 1.62 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அவற்றால் ஏற்படும் நோய்களால் ஆண்டுக்கு 6.32 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
தேசிய மருத்துவ இதழ் (இந்தியா) வெளியிட்ட ஓர் ஆய்வுக் கட்டுரை, “உலகின் ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்பில் 25 சதவீதம் இந்தியாவில் ஏற்படுகிறது. சென்னை புற்றுநோய் பதிவேடு மற்றும் திண்டுக்கல் அம்பிலிக்கை புற்றுநோய் பதிவேடு களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு களின்படி நாட்டிலேயே வாய்ப் புற்றுநோய் பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. சென்னை யில் 2012 முதல் 2016-க்குள் வாய்ப் புற்றுநோய் தாக்குதல் 32 சதவீதம் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டுள் ளது.
இந்திய பல் மருத்துவக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் குட்காவுக்கு தடை கோரிய வழக்கு ஒன்றில், “இந் தியாவில் 6 மணி நேரத்துக்கு ஒரு வாய்ப் புற்றுநோயாளி இறக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளது.
குட்காவுக்கு தடை விதித்ததில் மத்திய அரசுக்கு முன்னோடி என்ற பெருமையை பெற்றது தமிழகம். ஆனால், தடையை செயல்படுத்து வதில்தான் உண்மையான பெருமை அடங்கியிருக்கிறது.