கரூர், டிச.27:
கலப்பட டீத்துள் மீண்டும் கரூர் பகுதியில் புழங்குவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் நகராட்சி பகுதியான கரூர், தாந்தோணி, இனாம்கரூர், சணப்பிரட்டி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளான ஆண்டாங்கோயில் கிழக்குமேற்கு, சணப்பிரட்டி, மேலப்பாளையம், காதப்பாறை போன்ற பகுதிகளில் சுமார் 600 டீக்கடைகள் செயல்படுகின்றன. தொழில் நகரமான கரூரில் வேலைக்காக தினமும் 50ஆயிரம் தொழிலாளர்கள் வருகின்றனர். இவர்கள் இந்த கடைகளில்தான் டீ குடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கடைகளில் கலப்பட டீத்துள் பயன்படுத்தப்படுகிறது. டீத்துள் பாக்கெட்டுகளிலேயே கலப்படம் செய்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. வழக்கமான அசல் டீக்கும் இதற்கும் வித்தியாசம் நன்றாக தெரிவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கூலி வேலை செய்யும் செல்வம் என்பவர் கூறுகையில்,
டீயை குடிக்கும்போதே ஒருவித வித்தியாசமான சுவையால் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை உணர முடிகிறது.
இதனால் வயிற்றுக் கோளாறு ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு கலப்பட டீத்துளை கண்டுபிடித்து, தரமான டீத் துளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment