Jun 8, 2014

அருப்புக்கோட்டை பகுதியில் மாம்பழங்கள், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

அருப்புக்கோட்டை, ஜூன் 8:
கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பந்தல்குடி ரோடு, மெயின் பஜார், திருச்சுழி ரோடு, மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களில் கடைகளில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மதிவாணன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, சரவணன், மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்த கூடாது என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அருப்புக்கோட்டையில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் பஜார் பகுதியில் கார்பைடு கல்வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பந்தல்குடி ரோடு, மெயின் பஜார், திருச்சுழி ரோடு, மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களில் கடைகளில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மதிவாணன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, சரவணன், மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்த கூடாது என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பஜார் பகுதியில் பழக்கடைகளில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்து விற்கப்படும் மாம் பழங்கள் 250 கிலோவிற்கு மேலும், 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

No comments:

Post a Comment