மயிலாடுதுறை, ஜூன் 8:
மயிலாடுதுறையில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களில் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் கார்பைட் கல் மூலம் செயற்கையாக பழுக்க வை த்த மாம்பழங்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வா ளர் (பொ) அறிவழகன், துப்புரவு ஆய்வாளர்கள் பிச்சமுத்து, ராமையன், பழனிவேல், ஆணையர் (பொ) பார்த்திபன் ஆகியோர் நேற்று மயிலாடுதுறை நகரில் உள்ள மாம் பழ குடோன்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 8க்கும் மேற்பட்ட குடோன்களில் சோதனை நடைபெற்றது. கார்பைடு கல் மற்றும் ரசாயன திரவம் போன்றவற்றை உபயோகப்படுத்தி பழங்கள் பழுக்க வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. 8 குடோன்களில் இருந்தும் 1 டன் எடை கொண்ட செயற்கையாகப் பழுக்கவைத்த மாம்பழங் கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
இதுபோன்ற சோதனைகள் மாம்பழ சீசன் முடியும்வரை தொட ரும் என்று சுகாதார ஆய்வா ளர் அறிவழகன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment