சேலம், ஜூன் 7:
ஏற்காட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்காட்டில் இன்று முதல் கோடை விழா துவங்குகிறது. தொடர்ந்து நாளையும் கோடை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி ஏற்காடு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்யுமாறு, கலெக்டர் மகரபூஷணம், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி களுக்கு உத்தரவிட் டிருந்தார்.
இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக ஏற்காட்டில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமை யிலான குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண் டனர். இந்நிலையில், நேற்று மூன்றாம் நாளாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏற்காட்டில் சோதனை மேற்கொண்டனர். ஏற்காடு பஸ் ஸ்டாண்ட், ஏரி, கலையரங்கம், படகு இல்லம், ரவுண்டானா, ஒண்டிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொள் ளப்பட்டது. நேற்று சுமார் 85 கடைகளில் சோத னை மேற்கொள் ளப்பட்டது. இதில், காலாவதியான குளிர்பான பாட்டில்கள்,
4 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சுகாதாரமற்ற முறையில் பஜ்ஜி, சோளம் உள்ளிட்ட திண்பண்டங்களை விற்பனை செய்து கொண்டிருந்த தள்ளுவண்டி உரிமையாளர் களுக்கு எச்சரிக்கை விடுக் கப்பட்டது. திண் பண்டங்களை கொசு மொய்யக்காத வண்ணம், மூடி வைத்து விற்பனை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட் டது. இதில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாரியப்பன், சரவணன், புஷ்பராஜ், ஆறுச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment