Jun 8, 2014

புதுகையில் கார்பைடில் பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழங்கள், பால் பாக்கெட்டுகள் பறிமுதல்



புதுக்கோட்டை, ஜுன்.6:புதுகையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், காலாவதியான பால் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
புதுக்கோட்டையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மகாமுனி, ஆறுமுகம், ஜேம்ஸ், சிவமுருகன், அருண்பிரகாஷ், ராஜேந்திரன், ராஜன் மற்றும் வேல்முருகன் அடங்கிய குழுவினர் நேற்று பஸ் நிலையம், தட்சிணாமூர்த்தி மார்க்கெட், கீழராஜவீதி, வடக்குராஜவீதி, பழனியப்பா கார்னர் ஆகிய பகுதிகளில் மாம்பழ குடோன்கள் மற்றும் பழக்கடைகளில் கார்பைடு கல் வைத்து மாம்பழம் பழுக்க வைக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது அழுகிய மற்றும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நகராட்சி குப்பை தொட்டியில் அவைகளை போடப்பட்டு அழிக்கப்பட்டது. இதேபோல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பால்பாக்கெட்டுகள் 15 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

No comments:

Post a Comment