Jun 8, 2014

டவுனில் பான்பராக் விற்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

நெல்லை, ஜூன் 6:
நெல்லை டவுனில் பான்பராக் விற்ற வர் மீது உணவு பாதுகாப்பு துறையினர் தொடர்ந்த வழக்கில் விற்பனை யாளருக்கு ரூ.10 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின்பேரில் கடந்த 23&7&2013ம் தேதி உணவு பாதுகாப்பு அலு வலர் காளிமுத்து தலைமையிலான குழுவினர் நெல்லை டவுனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து சோதனை நடத்தி னர்.
அப்போது பான்பராக் விற்பனை செய்த சுரேஷ்குமார் என்பவரது கடையில் இருந்து உணவு பாதுகாப்பு துறையினர் 70 கிலோ பான்பராக்கை பறிமுதல் செய் தனர்.
இவற்றை உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி சோதனை நடத்தியதில், அறிக்கையில் தடை செய்யப்பட்ட பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதை விற்பனை செய்த சுரேஷ்குமார் மீது மாவட்ட வருவாய் அலுவலரும், கூடு தல் அமர்வு நீதிபதியு மான உமா மகேஸ்வரி முன்னிலையில் உணவு பாது காப்பு துறையினர் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த அவர் பான்பராக் விற்பனை செய்த சுரேஷ்குமாருக்கு ரூ.10 ஆயிரமும், தயாரித்த நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment