தேன்கனிக்கோட்டை, ஜூன் 7:
தேன்கனிக்கோட்டையில் சுகாதாரமற்ற முறையில் அனுமதியின்றி செயல்பட்ட 6 மாட்டிறைச்சி கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள கித்வாய் தெருவில் குடியிருப்பு பகுதியில் சிலர் மாட்டிறைச்சி கடை நடத்தி வந்தனர். அங்கிருந்து சுகாதாரமற்ற முறையில் கழிவுகளை அள்ளி வந்து கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், அப்பகுதியி நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சாம்ராஜ் ஆகியோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பேரூராட்சி துப்புரவு பணியார்களுடன் சென்று அனுமதியின்றி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த 6 மாட்டிறைச்சி கடைகளை மூடி சீல் வைத்தனர்.
மேலும், கடையில் விற்பணைக்காக வைத்திருந்த மாட்டிறைச்சிகளை துப்புரவு தொழிலாளர்களை கொண்டு அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தேன்கனிக்கோட்டையில் மட்டன் கடைகள், கோழிக்கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுகின்றன. தரமற்ற எடை கற்களை பயன்படுத்தி எடை குறைவாக வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment