பேராவூரணி, ஜூன் 7:
பேராவூரணி கடைவீதியில் கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
பேராவூரணி நகரில் உள்ள அனைத்து பழக்கடைகளிலும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரமாராமநாதன், சேதுபாவாசத்திரம் வட்டார அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 500 கிலோ எடையுள்ள கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் கெட்டுப்போன பழங் கள் கைப்பற்றி அழிக்கப்பட் டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறியதாவது: கால் சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங் களை உண்பதன் மூலம் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, செரிமான பிரச் னை, கல்லீரல் பாதிப்பு போன்ற குடல் பாதிப்புகள் உண்டாகலாம். குழந்தைகளு க்கு அதிகமான ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கூடிய வரை பழங்களை நன்றாக தண்ணீரில் ஊற வைத்து கழுவி உட்கொள்ள வேண்டும் என்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன், மேற்பார்வையாளர் சந்தனராஜன் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment