திருச்சி, ஜூன் 1:
திருச்சியில் கல்வி நிறுவனங்கள் அருகே சிகரெட், பீடி, புகையிலை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதியில் கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் சிகரெட், பீடி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்க ளான பான்பராக், குட்கா, ஹான்ஸ் விற்கப்படுவதை தடுக்க பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் அதிரடி உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த மாதம் முழு வதும் நடத்தப்பட்ட அதி ரடி சோதனையில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான சிகரெட், பீடி மற்றும் பான் பராக், குட்கா, ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்ட தோடு, உணவு பாதுகாப்பு துறைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:
கோடை விடுமுறை என் பதால் மாநகரில் பெரும்பா லான பள்ளி மற்றும் கல்லுரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சில கல்லுரி கள் மட்டும்தான் திறக்கப் பட்டு இருந்தது. இதனால் நாளை(2ம் தேதி) முதல் கல்வி நிலையங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட உள்ளது.
இவற்றை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர் கள் மீது சட்டப்படி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது புகையிலை விற்கப்பட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைகளு க்கு சீல் வைக்கப்படும்.
இதே போல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் எந்த ஒரு கல்வி நிலையத்தின் 100மீ. சுற்றுளவுக்குள் சிகரெட், பீடி மற்றும் புகை யிலை பொருட்கள் விற்க கூடாது.
அதுபோல தங்கள் கடைகள், வணிக வளாகங் கள் போன்றவற்றில் புகை பிடிப்பதற்கு ஏதுவாக நெருப்பு கொண்ட கயிறு, லைட்டர் போன்றவற்றை கட்டி தொங்க விடக்கூடாது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment