மானாமதுரை, மே 31:
தினகரன் செய்தி எதிரொலியாக, மானாமதுரையில் உள்ள மாம்பழக்கடைகளில், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மானாமதுரை பகுதியில் மாம்பழங்கள் கார்பைடு கல்லில் பழுக்க வைத்து, விற்பனை செய்வதாக கடந்த வாரம் தினகரனில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர்கள் மணிகண்டன், பாலசுப்ர மணியன் ஆகியோர், மானாமதுரையில் பழைய பஸ் ஸ்டாண்டு, புது பஸ் ஸ்டாண்டு, வாரச்சந்தை ஆகிய இடங்களில் உள்ள பழக்கடைகளில் மாம்பழங்களை யும், மாம்பழங்கள் இருப்பு வைக்கப்படும் கூடங்களை யும் ஆய்வு செய்தனர். அப்போது, சோதனைக்காக மாம்பழங்களை எடுத்துக் கொண்டனர். இவை,“கார்பைடு கல்லால் பழுக்க வைத்தது என தெரியவந்தால், கடை வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படு என அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேலும் கார்பைடு கல்லில் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர். இது குறித்து செயல்அலுவலர் அமானுல்லா கூறுகை யில்,“கால் சியம் கார்பைடு கல் மூலம் பழுக்கும் மாம்பழங்களை விற்பனை செய்யக்கூடாது.
இதனால், பொதுமக்கள்ளுக்கு உடல் நலக்கேடு ஏற்படுகிறது என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். சோதனைக்கு எடுத்துச் செல்லும் மாம்பழங்கள் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்தது தெரிய வந்தால், உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படு என்று கூறினார்
No comments:
Post a Comment