சேலம், மே 31:
சேலம் அடுத்த தாரமங்கலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மளிகை கடை, பீடா கடைகளில் நடத்திய சோதனையில்10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள மளிகை கடை, பீடா கடை, டீ கடைகளில் சோதனையிட்டனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் வைத்து விற்பனை செய்து தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் 10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதே கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் நிறுவனத்தின் பெயர், தேதி உள்ளிட்டவைகள் குறிப்பிடாமல் விற்பனைக்காக வைத்திருந்த 200க்கும் மேற்பட்ட ஜூஸ் பாக்கெட்கள் இருந்தது. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அப்போது கடை உரிமையாளர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் மற்றும் தரமற்ற ஜூஸ் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்தனர்.
No comments:
Post a Comment