தர்மபுரி, மே 31:தர்மபுரி
புறநகர் பஸ் ஸ்டாண்டில் ஓட்டல், டீக்கடை, குளிர்பானக்கடை, பெட்டிக்கடை, பேக்கரி, ஸ்வீட்ஸ் ஸ்டால், என நூற்றுக்கணக்கான கடைகள் உள் ளன. பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி காலாவதியான உணவு பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ் மற்றும் அலுவலர்கள் நேரில் கடைகளில் அதிரடி சோத னை நடத்தினர்.
இந்த சோத னையில், அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகை யிலை, குட்கா, பான்பராக் மற்றும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக 10 ஆயிரம் மதிப்புள்ள அந்த பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும், விற்பனை செ ய்யும் எண்ணெய் பலகாரம் சுகாதாரமாகவும், உடனுக்குடன் செய்த பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
No comments:
Post a Comment