Jun 25, 2014

திருச்சி கடைகளில்காலாவதி குளிர்பானங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிரடி



திருச்சி, ஜூன் 25:
திருச்சி சத்திரம் பேருந்து நிலைய கடைகளில் விற்கப்பட்ட ரூ.50ஆயிரம் மதிப்பிலான காலாவதி குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள மற்றும் போலி குளிர்பானங் கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி டாக்டர் ராமகிருஷ் ணன் தலைமையில் அலுவலர்கள் செல்வ ராஜ், கேசவமூர்த்தி, முத்துக்குமாரசாமி, கருப்பசாமி, பிரகாஷ், முத்துராஜ் ஆகி யோர் கொண்ட குழுவினர் 3 பிரிவுகளாக சென்று அதிரடி சோதனை மேற்கொண்ட னர்.
இதில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் 2மணி நேரம் வரை நடத்தப்படட சோதனையில் 10 கடைகளில் ரூ.50ஆயிரம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்கள், போலி குளிர்பானங்கள் விற் பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரி ராமகிருஷ்ணன் கூறுகையில், கடைகளில் கண்டுபிடிக்கப்பட்ட காலாவதி மற்றும் போலி குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானங்கள் மாநகராட்சி கிடங்கில் உடனடியாக கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் 2 குளிர்பானங்கள் மற்றும் 2 ஸ்வீட் கடைகளிலிருந்து ஆய்வுக்காக மாதிரிகளை எடுத்து மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக், கலப்பட டீ து�ள்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சோதனைகள் மாநகரில் உள்ள அனைத்து குளிர்பான கடைகளில் தொடர்ந்து நடை பெறும். சோதனை நடத்தப்பட்ட கடைகளில் மீண்டும் காலாவதியான குளிர்பானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
 
கடும் எச்சரிக்கை...
மேலும் ராமகிருஷ்ணன் கூறுகையில், கம்பெனியாளர்கள் மீது குற்றம்சாட்டும் விற்பனையாளர்கள் கம்பெனிகளில் வந்து இறங்க கூடிய குளிர்பானங்கள் காலாவாதியானதா? பிரபல குளிர்பானங்களின் பெயரில் போலி குளிர்பானங்கள் வருகிறதா? என சோதித்த பின்னரே குளிர்பானங்களை விற்பனையாளர்கள் வாங்கி விற்க வேண்டும். கம்பெனியாளர்கள் மீது விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு கூறக்கூடாது என வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றார். பொதுமக்கள் உஷார்...
குறைந்த விலைக்கு குளிர்பானங்கள் விற்பதை பொதுமக்கள் உடனே வாங்கிச் செல்லக்கூடாது. குளிர்பானம் வாங்கும் போது அது காலாவதியானதா?கம்பெனி குளிர்பானம் தானா அல்லது போலியானதா என பரிசோதித்த பின்னரே வாங்க வேண்டும். குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்று பொதுமக்கள் வாங்கிச் செல்லக் கூடாது. இதனால் பாதிப்பு பொதுமக்களுக்கு தான். இனியாவது பொதுமக்கள் உஷாராக இந்து காலாவதியான குளிர்பானங்களை சோதித்து பின்னரே வாங்க வேண்டும் என்றார் அதிகாரி ராமகிருஷ்ணன்.
டயல் செய்யுங்கள்
பொதுமக்கள் குளிர்பானங்கள் வாங்க வரும் போது காலவதியான குளிர்பானங்கள் என சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட கடையின் பெயர் குறித்து உடனடியாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அலுவலரிடம் நேரில் வந்து புகார் அளிக்கலாம். அல்லது 0431&2333330 என்ற தொலை பேசியிலும் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக சம்மந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment