Jun 25, 2014

சென்னையில் இருந்து சேலத்திற்கு.ரயிலில் பார்சலாக கடத்தி வந்த 1.20 லட்சம் குட்கா பறிமுதல்


சேலம், ஜூன் 25:
சென்னை யில் இருந்து சேலத்திற்கு ரயி லில் பார்சலில் கடத்தி வரப்பட்ட 1.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்க வை ஆர்பிஎப் போலீ சார் பறிமுதல் செய்தனர். சிக்கிய வாலிபரிடம் தீவிர விசார ணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக், குட்கா போன்றவை ஆங்கா ங்கே கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதை புகையிலை பொரு ட்களை ஒரு கும்பல், ரயில்கள் மூலம் பார்சலில் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வருவது கடந்த 3 மாதத்திற்கு முன்பு கண்டறியப்பட்டது. அப்போது சென்னையில் இருந்து கோவை மற்றும் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட் களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் சந்தேகப்படும்படி வரும் பார்சல் களை ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு நேற்று, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த 27 பண்டல்கள் மீது சந்தேகப்பட்டு பாதுகாப்பு படை யினர் தனியாக எடுத்து வைத்தனர். அந்த பண்டல்களை சோதனையிட்ட போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா இருந்தது தெரிந்தது.
இதையடுத்து அந்த பண்டல்களை எடுக்க வருபவரை பிடிக்க பாதுகாப்பு படையினர் தயாராக இருந்தனர். அப்போது சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து ராஜ் குமார் (45) என்பவர் பண்டல்களை எடுக்க வந் தார். அவரை இன்ஸ்பெக்டர் பொன்னு சாமி, காவலர்கள் சரவணன், தனசேகரன், லட்சுமிநாராயணன், ராதாமணி ஆகியோர் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரிடம் நடந்த விசாரணையில், சென்னை யில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களையும், பாக்குகளையும் மொத்தமாக தனது ஏஜென்சி பெயரில் அனுப்பி வைக்க கூறுவதும், அங்கிருந்து ஒரு கும்பல் மொத்தமாக அனுப்பி வைப்பது வாடிக்கையாக நடந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து 27 பண்டல்களையும் பறிமுதல் செய்து தனித்தனியாக சோதனையிட்டனர். அதில் 12 பண்டல்களில் போதை புகையிலையான குட்கா வும், மற்ற 15 பண்டல்களில் பாக்குகளும் இருந்தன. இதை பாதுகாப்பு படை உதவி கமிஷனர் கோவிந்தராஜூம் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.






இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர், அதிகாரிகளுடன் வந்து 1.20 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தார். இதுபற்றி நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், “போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. மற்ற பாக்குகளை திரும்ப ஒப்படைக்கிறோம். புகை யிலை பொருளை கடத்தி வந்தவர் மீது உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம்,“ என்றார்.

No comments:

Post a Comment