கடலூர், ஜூன் 25:
கடலூரில் ரசாயன கல் மூலம் செயற்கை முறையில் பழ வகைகள் பழுக்க வைக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.
பழக்கடைகளில் விற்கப்படும் பழங்கள் வெப்ப நிலை காரணமாக வீணாகுவதை தடுக்க செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3 டன் மாம்பழம் கார்ப்பரேட் கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் நகரில் இது போன்று பல்வேறு பழக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையிலான அலுவலர்கள் பேருந்து நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பழக்கடைகள், குடோன்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சில கடைகளில் இருந்து பழங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment