Apr 12, 2016

காலாவதியான குளிர்பானம் விற்பனை: ஆவின் விற்பனை நிலையம் முற்றுகை

சேலம்: சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனை நிலையத்தில், காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்ததால், வக்கீல்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் நீதிமன்ற வளாகத்தில், இரு மாதங்களுக்கு முன் ஆவின் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு ஆவின் நிறுவனத்தின் குளிர் பானங்கள், நெய், ஸ்வீட் வகைகள், பால் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. வக்கீல்கள் தங்கதுரை, முருகன் இருவரும் இங்கு காலாவதி குளிர்பானங்கள் விற்பதாகவும், அதை குடித்த தங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், சேலம் வக்கீல்கள் சங்கத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையிலான வக்கீல்கள், ஆவின் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு காலாவதியான குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்ததுடன், சோதனைக்காக மாதிரிகளை எடுத்துச்சென்றார்.
இதுகுறித்து வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: இங்கு காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். கேட்டால், இரு நாட்களுக்கு முன்தான், ஆவின் அலுவலகத்திலிருந்தே வந்தது என கூறுகின்றனர். உடல்நலத்தை கெடுக்கும் ஆவின் விற்பனை மையத்தை மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment