Jun 24, 2014

விலை குறிப்பிடாமல் விற்பனை கோயம்பேடு பஸ் நிலைய கடைகளில் 50 கிலோ உணவு பொருள் பறிமுதல்அதிகாரிகள் அதிரடி


அண்ணாநகர், ஜூன் 24:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடைகளில் விலை குறிப்பிடாமல் இருந்த 50 கிலோ உணவு பொருட் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் நடைமேடைகளில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு வரும் பயணிகள் பிஸ்கட், சாக்லெட், தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கி செல்கின்றனர். பிஸ்கட் மற்றும் தின்பண்டங்களை எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, தொழிலாளர் உதவி ஆணையர் தாலிகாபேகம் தலைமையில் அதிகாரி திவ்யநாதன் முன்னிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அங்குள்ள கடைகளில் விலை குறிப்பிடாமல் இருந்த 50 கிலோ தின்பண்டங்களை பறிமுதல் செய்தனர். மேலும், 20 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதிகாரிகளின் திடீர் சோதனையால், வியாபாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

1 comment:

  1. புகார் வரும் முன் தடுக்க நடவடிக்கை தேவை...

    ReplyDelete