Jun 23, 2014

தேனீர் கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

கரூர், ஜூன் 23:
கரூரில் டீ விலை உயர்ந்தும் சுவையற்றதாக இருப்பதால் விலைக்கேற்ற டீ வழங்க வேண்டும்என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகராட்சி பகுதியான கரூர், தாந்தோணி, இனாம்கரூர், சணப்பிரட்டி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளான ஆண்டாங்கோயில் கிழக்கு மேற்கு, சணப்பிரட்டி, மேலப்பாளை யம், காதப்பாறை போன்ற பகுதிகளில் சுமார் 600 டீக்கடைகள் இயங்கி வரு கிறது. தொழில் நகரமான கரூரில் வேலைக்காக தினமும் 50ஆயிரம் தொழிலாளர்கள் வருகின்றனர். இவர்கள் தின்பண்டம் மற்றும் டீ, சாப்பிட டீக் கடை களையே நாடுகின்றனர்.
பல டீக்கடைகளில் கலப்பட டீத்துள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. டீத்துளில் புளியங்கொட்டை பவுடர், பாக்கு கொட்டைகளின் பவுடர்கள் கலக்கப்பட்டு பாக்கெட்டுகளாக வருகிறது. இதனால் வழக்கமான டீக்கும், கலப்படதூள் டீக்கும் உள்ள சுவையை எளிதாக தெரிந்து கொள்ளலாம் என டீ பிரியர்கள் தெரிவிக்கின்றனர். பிற மாவட்டங்களை விட கரூர் மாவட்டத்தில் குறிப்பாக நகர பகுதியில் விற்பனை செய்யப்படும் டீ சுவையில்லாமல் இருப்பதாக வெளியூர்களில் இருந்து வேலை நிமித்தமாக வருவோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து கூலி வேலை செய்யும் ரகுமான் கூறுகையில், டீயை குடிக்கும் போதே ஒருவித சுவையின் மூலமாக இதனை உணர முடிகிறது. நாளுக்கு நாள் டீவிலை அதிகமாகிக் கொண்டே போகிறது. தற்போது ஒரு டீ ரூ.8ஆகி விட்டது. ஒருசில கடைகளில் 10க்கு விற்கப்படுகிறது. விலை உயர்த்தப்பட்டாலும் டீயில் சுவையில்லை. நல்ல டீ சாப்பிட வேண்டுமானால் ரூ.15 கொடுக்க வேண்டியதிருக்கிறது. தற்போது சப்ளை செய்யப்படுவது டஸ்ட் டீ தான். அதையும் இயற்கையான சுவையில் விநியோகிப்பதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு கலப்பட டீத்துளை கண்டுபிடித்து, தரமான டீத் துளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பிற ஊர்களில் எல்லாம் நகராட்சி, மாநகராட்சி, சுகாதாரபிரிவு அதிகாரிகளும், உணவுபொருள் பாதுகாப்பு அதிகாரிகளும் டீத்துள் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கலப்பட டீத்துளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கையால் கரூரிலும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment