Jun 24, 2014

பள்ளி முன் சுகாதாரமின்றி தின்பண்டங்கள் விற்பனை நகராட்சி பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்படுமா?


கரூர், ஜூன் 24:
கரூர் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளின் முன்பாக சுகாதாரமற்ற முறையில் பழங்கள், தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
கரூர் ஆசாத் ரோடு, கூத்தரிசிக்காரத் தெரு, லைட் ஹவுஸ், கோட்டைமேடு போன்ற பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இதுபோன்ற பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகளை குறிவைத்து பள்ளிகளின் முன்பாக பகல் நேரங்களில் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற பெரும்பாலான கடைகள் சுகாதாரமற்ற முறையில் தின் பண்டங்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறையாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment