அண்ணாநகர், ஜூன் 24:
அண்ணாநகர் பகுதியில் 58 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு உணவு தயாரிப்பின்போது, உரிய நடைமுறைகள் பயன்படுத்தப்படுகிறதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், அமைந்தகரை பொன்னுவேல் பிள்ளை தோட்டத்தில் உள்ள 3 அங்கன்வாடி மையத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கியுள்ளனர். ஒன்றரை வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு ஊட்ட சத்து மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட உணவு தயாரிக்கும் ஊழியர்கள் கையுறை, தலை கவசம், மேலாடை ஆகியவை முறையாக பயன்படுத்துகின்றனரா என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு, அலுவலர்கள் சதாசிவம், மணிமாறன், கண்ணன் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
மேலும், தயாரிக்கப்பட்ட உணவு, தரமானதாக உள்ளதா எனவும் பரிசோதனை செய்தனர். சுகாதாரம் இல்லாமல் தயாரிக் கும் உணவுகளால் வயிற்றுப்போக்கு உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். அதை தடுக்கவே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எலி ,ஈ, கொசு ,கரப்பான் பூச்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?
ReplyDelete