‘உப்பு முதல் கற் பூ ரம்’ வரை தமிழ் நாட்டை நம் பித் தான் கேரளா உள் ளது. ஆனால், இந்த நிலை விரை வில் மாறப் போ கி றது. முதல் கட்ட மாக காய் கறி உற் பத் தி யில் தன் னி றைவு பெறு வ தற் காக அம் மா நில விவ சா யத் துறை முடுக் கி வி டப் பட்டுள் ளது. கேர ளாவை நம் பித் தான் தமிழ் நாட்டில் ஆயி ரக் க ணக் கான விவ சா யி கள் உள் ள னர். தின மும் தமிழ் நாட்டி லி ருந்து கேர ளா வுக்கு சரா ச ரி யாக 2,000 டன் களுக்கு மேல் காய் க றி கள் கொண்டு செல் லப் ப டு கின் றன. குறிப் பாக ஒட்டன் சத் தி ரம், திண் டுக் கல், மதுரை, மேட்டுப் பா ளை யம், திரு நெல் வேலி ஆகிய சந் தை களி லி ருந்து தான் கேர ளா வுக்கு அதிக அள வில் காய் க றி கள் அனுப் பப் ப டு கின் றன.
சமீப கால மாக கேர ளா வில் புற் று நோ யா ளி களின் எண் ணிக்கை பல மடங்கு அதி க ரித் தது. இது தொடர் பாக நடத் திய ஆய் வில் காய் க றி கள், பழங் கள் உட் பட உண வுப் பொருட் களில் அதிக அள வில் பூச் சிக் கொல்லி மருந்து கலப் பது தான் புற்று நோய் அதி க ரிக்க கார ணம் என கண் ட றி யப் பட்டது. இதை ய டுத்து, விஷ மில் லாத காய் க றி கள் அனை வ ருக் கும் கிடைக்க வேண் டும் என்ற நோக் கத் தில் வீட்டை யொட்டி காலி யாக கிடக் கும் இடங் களி லும், மொட்டை மாடி களி லும் அவ ர வர் தங் க ளது தேவைக்கு ஏற்ப காய் கறி தோட்டங் களை அமைக் கும் திட்டத்தை கேரள அரசு கொண்டு வந் துள் ளது. பொது மக் களி டையே இது தொடர் பாக விழிப் பு ணர்வை ஏற் ப டுத்த குடும் பஸ்ரீ என்ற மகளிர் அமைப்பு முன் வந் துள் ளது.
இந்த மகளிர் அமைப் பி னர் வீடு வீடாக சென்று குறைந்த விலைக்கு காய் கறி விதை களை கொடுத்து தோட்டம் அமைப் ப தற் கான அறி வு ரை க ளை யும் வழங்கி வரு கின் ற னர். மாதத் திற்கு ஒரு சிறிய தொகை கொடுத் தால் அவர் களே வீட்டுக்கு வந்து விதை களை விதைப் பது முதல் அதை அறு வடை செய் வது வரை அனைத்து பணி க ளை யும் செய்து தரு கின் ற னர்.
தங் க ளது தேவைக்கு மேல் கூடு த லாக காய் க றி கள் விளைந் தால் அதை கூட்டு றவு மையம் மூலம் விற் பனை செய் ய வும் இவர் கள் ஏற் பாடு செய்து தரு கின் ற னர். இந்த புதிய திட்டத் தால் கேர ளா வில் மக் களி டையே அதிக அள வில் விழிப் பு ணர்வு ஏற் பட்டு வரு கி றது. தற் போது திரு வ னந் த பு ரம் முதல் காசர் கோடு வரை பல லட் சம் பேர் தங் க ளது வீட்டுத் தோட்டங் களி லும், மொட்டை மாடி களி லும் காய் கறி தோட்டங் களை அமைத் துள் ள னர். சிலர் மொட்டை மாடி களில் வாழை, கொய்யா போன்ற மரங் க ளைக் கூட நட்டுள் ள னர்.
கேரள முதல் வர் உம் மன் சாண்டி, கேரள மாநில காங் கி ரஸ் தலை வர் சுதீ ரன் உட் பட பல அமைச் சர் கள், அர சி யல் பிர மு கர் கள், மம் முட்டி, ஸ்ரீனி வா சன் உட் பட நடி கர், நடி கை களும் தங் க ளது வீடு களில் காய் க றித் தோட்டங் களை அமைத் துள் ள னர். முதல் வர் உம் மன் சாண் டி யின் வீட்டுத் தோட்டத் தில் சமீ பத் தில் நெல் அறு வடை செய் யப் பட்டது குறிப் பி டத் தக் கது. சமீ பத் தில் மலை யா ளத் தில் வெளி யான ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ என்ற பட மும் கேரள மக் களி டையே மொட்டை மாடி தோட்டம் குறித்த ஆர் வத்தை அதி க ரித் தது.
இந் தப் படத் தின் மையக் க ருவே விஷம் கலந்த காய் க றி களை தவிர்த்து அவ ர வர் தங் க ளது சொந்த வீடு களில் மொட்டை மாடித் தோட்டம் அமைக்க வேண் டும் என் பது தான். இந் தப் படத் தில் நடித்த மஞ்சு வாரி யர் தான் தற் போது குடும் பஸ்ரீ அமைப் பின் விளம் பர தூதர் என் பது குறிப் பி டத் தக் கது. மொட்டை மாடி யில் சிறந்த தோட்டம் அமைத் துள்ள வீடு களுக்கு இவரே நேர டி யாக சென்று அவர் களை உற் சா கப் ப டுத்தி வரு கி றார். இந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத் தின் ரீமேக் தான் ஜோதிகா நடித்து சமீ பத் தில் வெளி வந்த ‘36 வய தி னி லே’ ஆகும்.
கேரள அதி கா ரி கள் ஆய்வு
கடந்த மாதம் கேரள விவ சா யத் துறையை சேர்ந்த சில அதி கா ரி கள் நாகர் கோ வில், திரு நெல் வேலி, மதுரை, ஒட்டன் சத் தி ரம், மேட்டுப் பா ளை யம், ஊட்டி, பூவன் பாறை, திண் டுக் கல் மற் றும் கொடைக் கா னல் ஆகிய இடங் களி லுள்ள காய் கறி மற் றும் பழத் தோட்டங் களுக்கு சென்று ஆய்வு நடத் தி னர்.
கடந்த மே 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை இவர் கள் தமி ழக தோட்டங் களில் ஆய்வு நடத் தி னர். பின் னர் இந்த ஆய் வ றிக் கையை இக் குழு கடந்த 19ம் தேதி கேரள அர சி டம் தாக் கல் செய் தது. ‘தின க ரன்’ நாளி த ழுக்கு கிடைத் துள்ள அந்த அறிக் கை யில் பல் வேறு அதிர்ச் சித் தக வல் கள் இடம் பெற் றுள் ளன.
அறிக் கை யில்...
நாகர் கோ வி லில் கதளி வாழைப் ப ழத் தோட்டத் தில் ஆய்வு நடத் தி ய தில் அங்கு பியூ ரி டான் பூச் சிக் கொல்லி மருந்து அதிக அள வில் கலக் கப் ப டு வது தெரி ய வந் துள் ளது. திரு நெல் வே லி யில் முருங் கைக் காய், புட லங் காய் மற் றும் வெள் ள ரிக் காய் தோட்டங் களில் அனு ம திக் கப் பட்ட அளவை விட 5 மடங்கு வரை பூச் சிக் கொல்லி மருந்து பயன் ப டுத் தப் பட்டு வரு கி றது.
ஆன் டி ப யாட்டிக் கு கள் உள் பட 10 வகை யான பூச் சிக் கொல்லி மருந் து கள் இங் குள்ள தோட்டங் களில் பயன் ப டுத் தப் பட்டு வரு கி றது. டயா பென்ட் ரி ரோன், ஹெக்ச கொன சோன், குரோ ரான்ட் ரா னிலி புரோலே, 2,4&டி சோடி யம் சால்ட், இமி சா கோ பி ரிட், பாரக் காட் டைக் ரோ ரைடு உட் பட பூச் சிக் கொல்லி மருந் து கள் தான் அதிக அள வில் பயன் ப டுத் தப் பட்டு வரு கி றது.
மீத் தைல் புரோ மைட் உட் பட சில பூச் சிக் கொல் லி கள் பயன் ப டுத் தப் ப டும் விவ சாய நிலங் களி லி ருந்து சுமார் 500 மீட்டர் சுற் ற ள வில் வசிப் ப வர் களுக்கு சிறு நீ ரக புற் று நோய் உட் பட கொடிய நோய் வர வாய்ப்பு உண்டு. அனைத்து பூச் சிக் கொல்லி மருந் து க ளை யும் தடை செய்ய முடி யாது என் றா லும், பயிர் களில் அள வுக் க தி க மாக இந்த பூச் சிக் கொல்லி மருந் து கள் பயன் ப டுத் தப் ப டு கி றதா என் பதை அடிக் கடி கண் கா ணிக்க வேண் டும். கேரள சோத னைச் சாவ டி களில் தமிழ் நாடு உட் பட பிற மாநி லங் களி லி ருந்து வரும் காய் க றி கள் மற் றும் பழங் களை பரி சோ திக்க நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட வேண் டும்.
அவற் றில் பூச் சிக் கொல்லி மருந் து கள் நிர் ண யிக் கப் பட்ட அளவை விட அதி க மாக இருப் பது கண் டு பி டிக் கப் பட்டால் காய் கறி அல் லது பழங் களை கொண் டு வ ரும் வாக னங் களின் லைசன்சை ரத்து செய்ய வேண் டும். பூச் சிக் கொல்லி மருந் து களை அரசு நிறு வ னங் கள் மூலம் விற் பனை செய்ய நட வ டிக்கை எடுக்க வேண் டும். இவ் வாறு அந்த அறிக் கை யில் தெரி விக் கப் பட்டுள் ளது. பூச் சிக் கொல்லி மற் றும் சுகா தா ர மற்ற உணவு விவ கா ரம் கேர ளா வில் பூதா க ர மாக வெடித் துள் ளதை தொடர்ந்து கேரள அரசு பல அதி ரடி நட வ டிக் கை களை மேற் கொண்டு வரு கி றது. தமிழ் நாடு, கர் நா டகா உட் பட பிற மாநி லங் களி லி ருந்து காய் க றி கள், பழங் கள் மற் றும் உண வுப் பொருட் களை கொண்டு வரு ப வர் கள் ஜூலை 15ம் தேதிக் குள் கேரள உணவு பாது காப் புத் துறை யில் பதிவு செய்ய வேண் டும். ஜூலை 15ம் தேதிக் குப் பிறகு பதிவு சான்று பெறாத எந்த வாக ன மும் கேர ளா வுக் குள் அனு ம திக் கப் பட மாட்டாது. காய் க றி கள், பழங் கள் மற் றும் உண வுப் பொருட் கள் கொண்டு வரு ப வர் கள் அவை எங் கி ருந்து கொண்டு வரப் ப டு கி றது என் ப தற் கான ஆவ ணங் களை வைத் தி ருக்க வேண் டும்.
காய் கறி வரத்து குறைவு
கேர ளா வில் காய் கறி உற் பத்தி அதி க ரித்து வரு வ தால் கடந்த சில மாதங் க ளாக தமிழ் நாட்டி லி ருந்து கேர ளா வுக்கு செல் லும் காய் க றி கள் லாரி களின் எண் ணிக்கை குறைந்து வரு வ தா கக் கூறப் ப டு கி றது. இந் நி லை யில் தமி ழக விவ சா யி களின் ஓண விற் ப னை யும் முடங் கும் அபா யம் ஏற் பட்டுள் ளது.
No comments:
Post a Comment