ஆத்தூர், ஜூலை 16:
ஆத்தூர், தலைவாசல் பகுதி ஜவ்வரி ஆலைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மற்றும் அதிகாரிகள் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை ஆத்துர் தெற்குகாடு சோழன் சாலை யில் உள்ள ஜவ்வரிசி ஆலை யை ஆய்வு செய்த போது, ஜவ்வரிசி தயாரிப்பில் ஆசிட் கலப்படம் செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, ஆலையின் உரிமையாளர் அழகேசன்(42) என்பவரிடம் விசாரித்தனர். அப்போது, அவர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அந்த ஆலையை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா கூறுகையில்: கடந்த 5ம் தேதி ஆத்தூர் பகுதியில் அனைத்து மில் அதிபர்களையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். அதில், ஜவ்வரிசியில் கலப்படம் செய் வது குறித்து கடுமையாக எச்சரித்த பின்னரும், இது போன்ற தவறு செய்வது கண்டறியப்பட்டதால் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment