Jul 16, 2014

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பான்பராக் விற்பனை அமோகம்

திண்டுக்கல், ஜூலை 16:
பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விற்பணையை தமிழக அரசு தடை செய்து உத்தரவிட்டது. மக்களை பெரிதும் பாதிக்கக்கூடிய பான்பராக், குட்கா, புகை யிலை உள்ளிட்டவைகளை விற்பணை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. தற்போது இந்த உத்தரவு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. மாநகராட்சிகளின் மெத்தன போக்கால் இவற்றின் விற்பணை திண்டுக்கலில் அமோகமாக நடந்து வருகிறது.
அனைத்து கடைகளிலும் மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த புகையிலை பொருட்கள் அரசு தடை விதித்தவுடன் ஐந்து ரூபாயாக உயர்த்தி மறை முகமாக விற்பனை செய்கின்றனர். நகர் பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் பஸ்டாண்டை சற்றியுள்ள அனைத்து கடைகளிலும் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதை சற்றும் கண்டு கொள்ளமால் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.
பள்ளி மாணவார்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பான்பராக்கை பயன்படுத்துகின்றனர். சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ‘மதுவைவிட இந்த பொருட்களில்தான் பாதிப்பு அதிகம், இளைஞர்கள் அடிமையாவதும் இதில்தான். காவல்துறையும், மாநகராட்சி அதிகாரிகளும் இதை கண்காணிக்க வேண்டும். கண் துடைப்பாக நடைபெறும் சோதனைகளில் எந்த பலனும் இல்லை. மாணவர்களும், இளைஞர் சமுதாயமும் பாதிப்பை உணர்ந்து கைவிட்டால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்’ என்றனர்.

No comments:

Post a Comment