Jun 14, 2014

நகராட்சிக்குட்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை


பொள்ளாச்சி, ஜூன் 14:
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை மற்றும் வணிகவளாக கடைகளில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் போதைபாக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து, நேற்று பொள்ளாச்சி தாலுகா உணவு பாதுகாப்பு ஆலுவலர்கள் சுப்புராஜ், கோவிந்தராஜ், காளிமுத்து உள்ளிட்டோர் நகரில் உள்ள பல கடைகளில் சோதனை செய்தனர்.
பெருமாள்செட்டிவீதி, ராஜாமில்ரோடு, மத்தியபஸ்நிலைய பகுதி, வெங்கடேசாகாலனி, மார்க்கெட்ரோடு, தேர்நிலை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட னர்.
அப்போது, பல கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைபாக்கு மற்றும் பான்மசாலா பாக்கெட்டுகள் பெட்டிபெட்டியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.நகரில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 23 கடைகளில் பான்மசாலா மற்றும் போதைபாக்கு பாக்கெட்டுகள் மொத்தம் 30கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்டவைகளை அதிகாரிகள், ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி நகராட்சிக்குட்பட்ட நல்லூர் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர். மேலும், கடைகளில் பான்மசாலா மற்றும் போதைபாக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து சென்ற னர்.

No comments:

Post a Comment