நாகை, ஜூன் 14:
நாகை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உணவு விற்பனை நிலையங்களில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.1லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை நேற்று அழித்தனர்.
நாகை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு இடங்களில் உணவு விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தி காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர். அவற்றை நாகை மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் கொட்டி அழித்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், கோதண்டபாணி, சீனவாசன், சேகர், மகாராஜன், சதீஸ், பிரவீன்ரகு, அந்தோணி பிரபு, பாலகுரு, முத்தையன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுமக்கள் உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றை கவனித்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட உணவு பாதுகா ப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment