திருச்சி, ஜூன் 13:
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 7 கடைகளில் அபராதமாக ரூ.2,200 வசூலிக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சி பகுதியில் கல்வி நிறுவனங்களில் இருந்து 100மீட்டர் சுற்றளவுக்குள் சிகரெட், பீடி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக், குட்கா, ஹான்ஸ் விற்கப்படுவதை தடுக்க பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அதிரடி உத்தரவிட்டது.
அதன்பேரில், கடந்த மாதம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான சிகரெட், பீடி மற்றும் பான்பராக், குட்கா, ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்ட தோடு, உணவு பாதுகாப்பு துறைக்கும் அனுப்பப்பட் டன. தொடர்ந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கல்வி நிலையங்களை சுற்றிலும் உள்ள கடைகளில் மாநகராட்சி நகர்நல அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 7கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறி யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு சம்பவ இடத்தி லேயே அபராத தொகை யாக ரூ.2,200 வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் மாரியப்பன் கூறியதாவது: கோடை விடுமுறை என்ப தால் மாநகரில் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லுரிகள் விடுமுறை விடப் பட்டு இருந்தது. சில கல்லுரிகள் மட்டும்தான் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் இன்று (நேற்று) முதல் கல்வி நிலையங்களில் இருந்து 100மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இம்மாதிரியான கல்வி நிறுவனங்களை சுற்றிலும் இதுபோன்று சட்டத்தை மதிக்காமல் தொடர்ச்சியாக புகையிலை பொருட்கள் விற்றால் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது சுகாதார சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் திருச்சி மாமன்றத்தில் மூலம் விதிமுறைகள் வகுக்கப்பட்டு தொழில் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment