சேலம்: பாலில் கலப்படம் செய்த வியாபாரிகள் இருவருக்கு, தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை பகுதியில் சுப்பிரமணி, வெங்கடாசலம் ஆகியோர் பால் வியாபாரம் செய்து வந்தனர். கடந்த, 2006 முதல், 2009 வரை, இடங்கணசாலை பேரூராட்சியில் உணவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சீனிவாசன், பால் உணவு மாதிரியை சேகரித்து, அரசு பொது பகுப்பாய்வுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
அப்போது நடத்தப்பட்ட ஆய்வில், பாலில் கலப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, இருவர் மீதும், சங்ககிரி மாஜிஸ்திரேட் எண் 2 நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
வழக்கை மாஜிஸ்திரேட் மோகன்குமார் விசாரித்து, பாலில் கலப்படம் செய்த சுப்பிரமணி, வெங்கடாசலம் ஆகியோருக்கு, தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா, 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment