ஆத்தூர்: ஆத்தூரில், அனுமதியின்றி செயல்பட்டு வந்த, "ஆஸிட்' விற்பனை ஆலைக்கு, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், "சீல்' வைத்தனர்.
ஜவ்வரிசி, வெண்மை நிறத்தில் இருப்பதற்காக, ஜவுளி மற்றும் பேப்பர் வாஷிங் உபகரணங்களுக்கு சுத்தப்படுத்த பயன்படுத்தும், விஷத் தன்மை கொண்ட ஆப்டிக்கல் ஒயிட்னர் (ஹைப்போ கரைசல்), சல்பியூரிக் அமிலம் ஆகியவை, சேகோ ஃபேக்டரிகளில் பயன்படுத்துவதாக, புகார் எழுந்தது.
அதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அணுராதா தலைமையிலான, உணவு பாதுகாப்பு சுகாதார அலுவலர்கள், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, சேகோ ஃபேக்டரிகளில், நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆத்தூர் உடையார்பாளையத்தில் இருந்து, "ஆஸிட்' விற்பனை செய்வதாக, தகவல் கிடைத்தது. அதையடுத்து, ஆத்தூர் வடக்கு உடையார்பாளையம், நேரு நகர், சிவக்குமார் என்பவரது, "அருள்முருகன் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, மின்சாதன பொருட்கள் விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்று, "சல்ப்யூரிக் அமிலம், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலம் மற்றும் ப்ளீச்சிங் வாட்டர்' ஆகியவை, அனுமதியின்றி பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.
அதையடுத்து, குடோனில் இருந்த, 80 கேன், "ஆஸிட்' பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, "ஆஸிட்' பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு, "சீல்' வைத்தார்.
No comments:
Post a Comment