சிவகங்கை, நவ. 20:
இளையான்குடியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பான்பராக், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இளையான்குடியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் அருள்நம்பி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜெய்சங்கர், கோவிந்தன், உதயராஜ், ஜோதிபாசு, ராஜேஸ் ஆகியோர் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் பெட்டிக்கடை, மளிகை, பேக்கரிகளில் காலாவதியான உணவுபொருட்கள், மற்றும் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா, புகையிலை, டீக்கடைகளில் கலப்பட டீத்தூள், காலாவதியான பால்பாக்கெட்டுகள், குடிநீர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதுபோல் தடை செய்யப்பட்ட, காலாவதியான, தேதி இல்லாத பொருட்களை விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கடைகாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

No comments:
Post a Comment