மேட்டூர் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேட்டூர் நகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை, சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர் கடைகளில் கலப்பட டீத் தூள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
தேநீர் கடைகளில் இருந்து சுமார் 10 கிலோ கலப்பட டீத் தூள் கைப்பற்றப்பட்டது.
சதுரங்காடி பகுதியில் சம்பத்சிங் என்பவரது கடையில் காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டன.
அதேபோல, குருராமன், லட்சுமனநாதன் ஆகியோரது மொத்த வியாபாரக் கடைகளில் விற்பனைக்குத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும்.
இதைத் தொடர்ந்து, பிற்பட்டோர் நலத் துறையின் மாணவர் விடுதி, மாணவிகள் விடுதிகளிலும் ஆய்வுகள் நடைபெற்றன.
அப்போது, விடுதிகளில் உள்ள பொருள்கள் இருப்பு வைக்கும் அறைகள் அசுத்தமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment