Nov 20, 2013

கோபி மார்க்கெட்டில் திடீர் ரெய்டு 2.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோபி,நவ.20:
கோபி தினசரி மார்க்கெட் பகுதியில் இரண்டு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா வகைகள் விற்பனை செய்யப்படுவதாக கோபி சப்கெலக்டர் சந்திரசேகர் சாகமுரிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் குறிப்பிட்ட கடை களில் சோதனை நடத்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சப்கலெக்டர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணநிதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்ணன், முருகேசன், மணி, மனோகரன், கதிர்வேல் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவி னர் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மொத்த விற்பனை கடை ஒன்றில் சோதனை நடத்தினர். அந்த கடையில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா வகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவ ற்றை பறிமுதல் செய்தனர். அதைத்தொட ர்ந்து அருகில் இருந்த மற்றொரு கடையில் சோதனை நடத்த சென்ற போது கடையை பூட்டிவிட்டு கடை உரிமையளர் வெளியேறியிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மார்க்கெட் கடை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் துரை மற்று ம் மற்ற கடை உரிமையாளர்களின் முன்னிலையில் அதிகாரிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மூட் டை மூட்டையாக புகையி லை மற்றும் குட்கா வகைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து சப்கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சப் கலெக் டர் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பறிமுத ல் செய்யப்பட்ட புகையிலை மற்று ம் குட்கா வகைகளை நகரா ட்சி குப்பை கிடங்கில் தீ வத்து அழிக்கப்பட்டது.

No comments:

Post a Comment