தண்டையார்பேட்டை, நவ. 20:
சவுகார்பேட்டை குமரப்ப மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்கள் டன் கணக்கில் பதுக்கி வைத்துள்ளதாக, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லட்சுமி நாராயணாவுக்கு தகவல் கிடைத்தது.
அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் நேற்று மதியம் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 2.5 டன் குட்கா பொருட் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், குடோன் உரிமையாளர் பவித்ரனிடம் விசாரித்தனர். அதில் மும்பையில் இருந்து லாரி மூலம் குட்கா பொருட்களை கடத்தி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சப்ளை செய்ய இருந்து தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

No comments:
Post a Comment