Apr 13, 2013

Kaalai Kathir News


நீதிமன்றம் அதிரடி உத்தரவு தரமற்ற பொருள் விற்பனை செய்ததம்பதியருக்கு ஒரு ஆண்டு சிறை
ஆத்தூர்: ஆத்தூரில், தரமற்ற பேரீட்ச்சை பழம் பாக்கெட் விற்பனை செய்த, தம்பதியருக்கு, தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.ஆத்தூர் நகராட்சி, புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, வணிக வளாக கடைகளில், தரமற்ற உணவு பொருட்களை, பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்வதாக, மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது.அதன்பேரில், ஆத்தூர் நகராட்சி கமிஷனர் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், 2012 ஃபிப்ரவரி மாதம், ஆத்தூர் புது பஸ் ஸ்டாண்ட் கடைகளில் ஆய்வுப் பணி மேற்கொண்டனர்.அப்போது, அரசு அனுமதியின்றி, "சீல்' வைத்து, தரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட பேரீட்ச்சை பழம் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, உணவு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.அந்த ஆய்வில், தரமற்ற உணவு பொருள் என்பது உறுதிப்படுத்தியதால், ஆத்தூர் ஜே.எம்., முதலாவது நீதிமன்றத்தில், ஆத்தூர் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்புராஜ், பேரீட்ச்சை பழம் விற்பனை செய்த முத்து, 65, அவரது மனைவி சூடாமணி, 55, ஆகிய இருவர் மீது வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நேற்று, மாஜிஸ்திரேட் வேலரஸ் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், தரமற்ற உணவு பொருள் விற்பனை செய்த முத்து, மனைவி சூடாமணி ஆகிய இருவருக்கும், தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment