சேலம், ஏப்.13:
சேலம்
மாவட்டத்தில் இயங்கி வரும் குடிநீர் ஆலைகளில் உணவுப்பாதுகாப்புத்துறை
அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சந்தேகத்துக்குரிய 10 ஆலைகளில் இருந்து
குடிநீர் மாதிரிகள் எடுத்து, ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
உணவுப்பாதுகாப்பு
சட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி, குடிநீர் வர்த்தகத்தில் ஈடு பட்டு வரும்
நிறுவனங்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு
மேல் வணிக மதிப்பு கொண்ட நிறுவனங்கள் லைசென்ஸ் பெற வேண்டும். கோடை காலத்தை
பயன்படுத்திக் கொண்டு பலர் அனுமதியின்றி குடிநீர் ஆலைகளை நடத்தி
வருவதாகவும், மினரல் வாட்டர் என்ற பெய ரில் போலி குடிநீர் ஆலை களை நடத்தி
வருவதாகவும் உணவுப்பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,
மாநிலம் முழுவதும் குடிநீர் ஆலைகளில் அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக திடீர்
சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் 38 குடிநீர் ஆலைகள் உள்ளன.
இவற்றில் 30 குடிநீர் ஆலைகள் உணவுப்பாதுகாப்புத்துறையிடம் லைசென்ஸ் பெற்று
இயங்கி வருகின்றன. ஹெர்பல் வாட்டர், பிளே வர்டு வாட்டர் என்ற பெய ரில் 8
குடிநீர் ஆலைகள் லைசென்ஸ் பெறாமல் இயங்குகின்றன. மேலும் சில ஆலைகள் விவசாய
கிணற் றில் இருந்து நீரை ஊறிஞ்சி, சந்தையில் விற்பனை செய்து வருவதும்
தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கடந்த வாரம்
சேலம், பனமரத்துப்பட்டி, ஆத்தூர், மேட்டூர், இடைப்பாடி, கொங்கணாபுரம்
பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 10 குடிநீர் ஆலைகளில் இருந்து குடிநீர்
மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இந்த குடிநீர் மாதிரிகள், சென்னை யில்
உள்ள உணவுப்பகுப்பாய்வு கூடத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு
உள்ளது.
இதுகுறித்து
உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஹெர்பல் வாட்டர் என்ற
பெயரில் விற் பனை செய்யப்படும் குடிநீ ரில் 99 சதவீதம் சாதாரண தண்ணீர்தான்
உள்ளது. அதில் மூலிகை சத்து இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. பிஐஎஸ்
சான்றிதழ் பெறாமல் எந்த ஒரு குடிநீர் ஆலையும் இயங்கக்கூடாது. ஆனால், பல
குடிநீர் ஆலை கள் குடிநீரை பிளாஸ்டிக் கேன்களிலும், பாக்கெட்டுகளிலும்
பிஐஎஸ் சான்றிதழ் பெறாமல் அடைத்து விற் பனை செய்து வருகின்றன.
சம்பந்தப்பட்ட ஆலைகளில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு,
உணவுப்பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டு உள் ளது. 15
நாட்களில் இவற்றின் ரிசல்ட் கிடைத்துவிடும். அதைப் பொறுத்து சம்பந்தப்பட்ட
நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.
No comments:
Post a Comment