உத்தமபாளையம், நவ. 24:
தேனி மாவட்டத்தில் கலப்படபொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் எந்த சோதனையும் நடத்தாமல் மவுனம் காக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கூடலூர் உள்ளிட்ட நகரங்களில் அதிகளவில் பான்ப ராக், குட்கா, மசாலா பொருட்கள் எல்லா கடைகளிலும் விற்பனை நடக்கிறது. பெரிய அளவில் வியாபாரம் பார்ப்பவர்கள் மொத்தமாக இதனை வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். உரிய அனுமதி பெறாமலேயே பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட தண்ணீர் விற்பனை நடக்கிறது. இது தரமானதா அல்லது அனைத்து அனுமதிகளையும் பெற்றுதான் விற்பனைக்கு அனுப்பப்படுகிறதா என்பதையும் இது வரை சோதனை செய்வதாக தெரியவில்லை. ஓட்டல்கள், டீ கடைகளில் சுகாதாரம் இல்லாமல் இயங்குவதால் நோய்கள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாட்டிலில் போட்டுவிற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள், பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சிறுவர்களுக்கான பொருட்களில் அதிகமான கலப்படம் உள்ளது. கலர்கலராய் கலப்படம் கலக்கப் பட்டு விற்பனை நடைபெற்ற போதிலும் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் உணவுதரகட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளனர்.
எல்லா ஊர்களிலும் இதற்கென தனியாக அதிகாரிகள் உள்ளனர். புகார்கள் சென்றால் பெயருக்கு சென்று சோதனை நடத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் உணவில் கலப்படம், தண்ணீரில் கலப்படம், பாலில் கலப்படம், சிறுவர்களுக்கான திண்பண்டங்களில் கலப்படம் என தினமும் தேனிமாவட்டம் கலப்பட பொருட்கள் விற்பனை சந்தையாக மாறிவருகிறது. இதனால் சுகாதா ரம் கெடுவதுடன், பொதுமக்களுக்கு புதுப்புது நோய்கள் பரவும் ஆபத்தும் உள்ளது. உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சோதனை செய்ய எல்லா உரிமைகளும் இருந்தும் அதனை காற்றில் பறக்கவிட்டு சோதனையே நடத்தாமல் வேலை செய்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறிய புகாரில், நாம் சாப்பிடும் உணவு சுகாதாரம் அற்றதாக உள்ளது. அதிலும் கலப்படம் கலந்துள்ளதால் புதுப்புதுநோய்கள் பரவுகின்றன. உணவு தரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆனால் இதற் கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளோ எந்த சோத னையும் செய்யாமல் உள்ளனர்’ என்றனர்.

No comments:
Post a Comment